சாதி இருந்துவிட்டுப் போகட்டுமே!
சாதி இருந்துவிட்டுப் போகட்டுமே!சாதியைப் பற்றி டோண்டு அவர்களும், வால் பையனும் எழுதியிருந்ததைப் படித்தேன், எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
மனிதன் எப்போதுமே (ஆதிகாலம் தொட்டே)ஒரு குழுவாக வாழ்ந்தே பழகியவன், அந்தக் குழுவிற்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தவர்கள், மற்ற குழுவிற்கும் இதே, பழக்க வழக்கங்கள் குழுவிற்குக் குழு மாறுபடும் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்குச் சென்று அவர்கள் பழக்க வழக்கங்கள் பிடிபடாமல் உறவுகள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் எனவே அந்த அந்த இனத்துக்குள் கொள்வினை, கொடுப்பினை நடத்துவது வாழ்க்கைக்கு சுலபம்.
இப்போது குழு,இனம் என்பனவற்றுக்குப் பதில் சாதி இருக்கிறது, ஒருவர் பழக்க வழக்கங்கள் மற்றவருக்கு பிடிபட்டது - சாதி விட்டு சாதி (கலப்பு மணம் என்பதை ஒரு முறை MR ராதா அவர்கள் - மனுசனை மனுசன் கல்யாணம் செய்யறதை எப்படிடா கலப்பு மணம்னு சொல்றீங்க!, மனுசன் மாட்டை கல்யாணம் செஞ்சா அது கலப்பு மணம் - அப்படின்னார்) மணம் புரிந்தவர்கள் அவர்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிரமம் நான் அறிவேன். சாதியால் இந்த இடர்பாடு நீங்குகிறது.
வால்பையன் அவர்கள் "சாதி வன்முறைகளையும்,கலவரத்தையும் மட்டுமே கொடுக்கும்" என்று சொன்னார்.
சாதி மட்டுமா? மாநிலம், மொழி, நாடு என்ற எத்தனை மனிதனைப் பிரிக்கிறது?
ஏன் அவற்றை எல்லாம் பெருமிதமாகக் கொள்ளும் நாம், சாதியை மட்டும் சங்கடமாக உணர்கிறோம். நமக்கு அடிப்படையில் (பள்ளி, கல்லூரிகளில்) கற்பித்தவற்றை வைத்துத்தானே? நான் என் நாட்டை நேசிக்க வேண்டும், தாய் மொழியை நேசிக்க வேண்டும் என்றால் என் சாதியை நேசிப்பது என்ன தவறு? உங்களுக்கு உங்கள் தேசம் உயர்ந்தது என்றால் பாகிஸ்தானியர்களுக்கு அவர்கள் தேசம், உங்களுக்கு உங்கள் மொழி உயர்ந்தது என்றால் கன்னடம் பேசுபவர்களுக்கு அவர்கள் மொழி - இதனால் எத்தனை போர், வன்முறை (சாதியால் இறந்தவர்களை விட மேற்சொன்னவற்றால் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை!)
எனவே மொழி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று, தேசம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என சொல்லவேண்டியதுதானா? இல்லை! ஒரு குழுவாக இருப்பதில் உள்ள லாபம் இதிலும் நமக்கு வேண்டும்.
மொழி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல மொழி வெறி ஒழிக்கப்பட வேண்டும், தேசம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல எனது தேசம்தான் சிறந்த்தது- மற்ற நாடுகள் எல்லாம் எனக்குக் கீழே என்ற எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும்
அதே போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும்,எனது சாதியே உசத்தி, மற்ற எல்லாம் தாழ்த்தி என்ற எண்ணம் ஒழிக்கப்படவேண்டும்.
எனவே
சாதி இருந்துவிட்டுப் போகட்டுமே! (அதன்பாட்டுக்கு!)
12 Comments:
நானும் இதைத்தான் ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருக்கிற்றேன். யாரும் கேட்கிற மாதிரி தெரியவில்லை!
இந்த பதிவை அவசியம் படிங்க...
http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html
நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/
//எனவே மொழி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று, தேசம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என சொல்லவேண்டியதுதானா? //
தெளிந்த நீரோடையையா நீர். பிரமாதம் போங்கள்.
எல்லாம் லாபம் எரிகின்ற கொல்லியில் எண்ணெய் ஊற்றி குளிர்காயும் மத தலைவர்கலும், அரசியல் தலைவர்கலும் போடும் வேஷம்தான். என்ன செய்ய?
Good thought. However, instead of saying no to caste, we have to start saying we will have tolerance for any caste. That way, if someone willingly want to move from one caste to another because of "Love" we should have tolerance.
Regards
R Sathyamurthy
http://www.sathyamurthy.com/tag/humor
Please change your comment mode. You are not allowing those who are not google users to post. There are several people who have accounts with Wordpress and not have account with Google.
Regards
R Sathyamurthy
http://www.sathyamurthy.com/tag/satyam
Yes, Done Now
உண்மையை இப்படி நறுக்குத் தெரித்தார் போல் சொன்னதற்காக, போலி சாதி ஒழிப்புவாதிகள் உங்களை கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். உங்களை பார்பானீயம் பேசும் #$%^&* என்பார்கள்.
welcome to the real world
What a regressive opinion! There is no such thing as caste in any other country other than India
No other human beings in other parts of the world condemn people from birth and call them untouchables or inferior.
In other parts of the world, they have class system depending on your financial position However,
Even if you are born in a poor family, if you have talent, good brain and hard work you can improve your financial position and change your background
But if you are born in a caste you die in the same caste, it can never be changed.
Your ethnic group and language is shaped by evolution, that identity is shaped by the language you speak, the place you live and the culture is evolved by ethno linguistic identity and the region, sometimes by religion.
All over the world human beings are evolved like this .In most places countries are divided by ethno linguistic lines. That is why we have France, Germany, Spain, Poland Japan, Korea etc.
Caste system wasn’t a natural evolution of the human beings .It was artificially introduced by the invaders of India to subjugate the indigenous people of India thousands of years ago.
This is the most backward concept of the world.
Although India has hard working and intelligent people the caste system makes the Indian society a very backward society.
It is shocking the so called educated people also have this mentality. but I suppose it is understandable, because caste has made them to get all the benefit s at the expense of others and they want the status quo and the caste system alive so that they can continue calling them superior than others.
Don’t come out with stories about allocation system for backward castes, Of course we need it to correct the injustice done to the so called lower castes for the last 5 thousand years.
When caste is wiped out from India then there is no need for the quota system.
ரொம்ப ரொம்ப சரி!
நான் தங்களுடைய கருத்திலிருந்து மாறுபடுகிறேன். தேசங்களும், மொழிகளும் மனிதர்களைப் பிரிக்கத்தான் செய்கின்றன். அதில் சந்தேகமில்லை. ஆனால் சாதி என்பது, சக மனிதனுக்கு உள்ள வாழும் உரிமையைக் கூட மறுக்கிறது. குறிப்பிட்ட சாதியினர் தெருவில் வரக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, டீக்கடைகளில் இரட்டை டம்ளர்கள், கோவில்களில் அனுமதியில்லை இது போன்ற சமூக புறக்கணிப்புகள் சாதியினால் மட்டுமே நிகழ்கின்றன. தேசபக்தி உணர்வோ, மொழி வெறியோ இத்தகைய கீழ்த்தரமான மனித உரிமை மீறலுக்கு மனிதனை இட்டுச் செல்வதில்லை.
மேலும் சாதியானது மதத்தின் மூலம் தெளிவாக வறையறுக்கப்பட்டு, குறிப்பிட்ட சமுதாயத்தினரை புறக்கணிப்பது நியாயமாக்கப்படுகிறது.
நீங்கள் மொழிவெறியோடு சாதிய உணர்வை ஒப்பிட்டு, சாதியை ஆதரிப்பவர்களும் மொழி வெறியர்களைப் போல (வாட்டாள் நாகராஜ்) என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி!
செய்யும் தொழிலே தெய்வம் என்ற "உயர்ந்த தத்துவம்" (அதுபற்றி அங்கு எழுதியுள்ளேண்) மாதிரி இருக்கிறது.
சாதிக் கட்டமைப்பு இருந்தால்தான் சமூகம் நல்லா இருக்கும் என்று 'பெரியவர்' மற்றும் பலர் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(காந்தியும் உண்டோ, அந்தக் கூட்டத்தில்?)
உங்கள் கருத்து எல்லா சாதிக்காரர்களுக்கு ஏற்புடைத்ததா? உயர் சாதிக்காரர்களுக்கு மட்டும் வசதியானதா? - என்று மட்டும் உங்களையே கேட்டுக் கொள்ளுங்களேன்.
//உங்கள் கருத்து எல்லா சாதிக்காரர்களுக்கு ஏற்புடைத்ததா? உயர் சாதிக்காரர்களுக்கு மட்டும் வசதியானதா? - என்று மட்டும் உங்களையே கேட்டுக் கொள்ளுங்களேன்//
தருமியின் கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது. நான் ஒரு சாராரின் நிலையில் நின்று பார்க்கிறேனோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. யோசிக்க சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. தருமியின் வருகைக்கு நன்றி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home