Tuesday, July 08, 2008

ஹரித்வார் - கோவில்கள் - பயணம்-2







ஹரித்வாரில் 2 கோவில்கள் பிரசித்தம் - மானசாதேவி மற்றும் சண்டிதேவி ஆகியவை. சண்டிதேவி கோவிலுக்கு ரோப்காரில்தான் செல்லமுடியும். மானசாதேவி கோவிலுக்கும் ரோப்கார் உண்டு ஆனால் நாங்கள் நடந்துதான் மலையேறினோம்.
நான் அங்கே கவனித்த ஒரு முக்கியமான விசயம் "செல்போன் உபயோகம்". ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஸ், கேதார்நாத், பத்ரிநாத் சென்று திரும்பும்வரை - எங்களைப் போன்ற சிலபேரைத்தவிர மற்ற யாரும் செல்போனில் பேசிக்கண்டதில்லை. ஆச்சரியம் ஆனால் உண்மை. இங்கே நம் கோவில்களில் யாவரும் செல்போனும் கையுமாகத்திரியும்போது அங்கே ஏன் அப்படி என்று விளங்கவில்லை.

மாலையில் மஹா ஆரத்தி என்ற கங்கை வழிபாடு உண்டு, கூட்டம் அலை மோதுமாம், நேரம் இல்லாததால் அதைத் தவிர்த்துவிட்டு ரிஷிகேஷ் நோக்கிப் புறப்பட்டோம்.

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home