Thursday, October 18, 2007

புதிர்கள் - எண் - 8

1.
உங்களிடம் இரண்டு கயிறுகள் (இரண்டும் சம நீளம் கொண்டவை அல்ல) உள்ளன. ஆனால் ஒரு முனையில் பற்றவைத்தால் ஒரு மணிநேரம் எரியக்கூடியவை. இந்த கயிறுகளை வைத்து எப்படி 45 நிமிடத்தை கணக்கிடுவீர்கள்

2.
8 லிட்டர், 5 லிட்டர், 3 லிட்டர் கேன்கள் உள்ளன. 8 லிட்டர் கேனில் முழுதுமாக பால் உள்ளது 5,3 லிட்டர் கேன்கள் காலி. இந்த 3 கேன்களை வைத்து 8 லிட்டர் கேனில் 4 லிட்டரும், 5 லிட்டர் கேனில் 4 லிட்டரும் எப்படி பிரிப்பீர்கள்

12 Comments:

At Thursday, October 18, 2007 5:19:00 AM , Blogger யோசிப்பவர் said...

யாரோ ஒருவரே,

முதல் கேள்விக்கு என்னோட பதிலா, கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கவும்.
யோசிங்க 2004

 
At Thursday, October 18, 2007 5:22:00 AM , Blogger வவ்வால் said...

1) ஒரு கயிரினை சமமாக மடித்தால் பாதி கிடைக்கும் , அதனை குறித்துக்கொண்டால் அது வரைக்கும் எரிவது அரைணி நேரம்,
பின்னர், அடுத்த பாதியை சம்மாக மடித்து குறித்து விட்டால் அது வரைக்கும் எரியும் நேரம் கால்மணி நேரம் , இப்போது முக்கால் மணியை கணக்கிடலாம்.

அல்லது ஒரு கயிற்றினை இரண்டு முனையிலும் பற்ற வைத்து விட்டால் அது அரைமணி மட்டுமே எரியும். அடுத்தக்கயிற்றினை , சரிபாதியாக வெட்டி அதனையும் இரு முனையிலும் பற்ற வைத்தால் கால் மணி மட்டுமே எரியும் ,இப்போது முக்கால் மணி நேரம் கணக்கிடலாம்!

2)முதலில் 3 லி, கேனால் 3 லி எடுத்து 5 லி கேனில் ஊற்ற வேண்டும், பின்னர் மீண்டும் 8 லி கேனில் இருந்து 3 லி கேனில் 3 லி ஊற்ற வேண்டும்.

தற்போது 8 லி கேனில் 2 லி இருக்கும்,
5 லி கேனில் 3 லி இருக்கும்,
3 லி கேனில் 3 லி இருக்கும்.
இப்போது 3 லி கேனில் இருப்பதை எடுத்து 5 லி கேனில் ஊற்றினால் இரண்டு லி மட்டும் தான் ஊற்ற முடியும் 1 லி 3 லிட் கேனில் இருக்கும்.

மீண்டும் 5 லிட் கேனில் இருப்பதை எடுத்து 8 லிட் ஊற்ற வேண்டும்.

5 லிட் காலியாகி விடும் , அதில் 3 லிட் கேனில் இருக்கும் 1 லிட் எடுத்து ஊற்ற வேண்டும்.
இப்போது 8 லிட் கேனில் 7 லி இருக்கும், 5 லி கேனில் 1 லி இருக்கும்,
3 லி கேன் காலியாக இருக்கும்.


இப்போது 8 லிட் கேனில் 7 லிட்டர் இருக்கும் அதில் இருந்து 3 லிட் கேனில் ஊற்றினால் , 8 லி கேனில் சரியாக 4 லிட் இருக்கும் , 3 லிட் கேனில் இருப்பதை எடுத்து ஏற்கனவே 1 லிட் இருக்கும் 5 லிட் கேனில் ஊற்றினால் அதிலும் 4 லிட் இருக்கும்!

 
At Thursday, October 18, 2007 6:39:00 AM , Blogger ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

1.ஒரு கயிறை இரண்டாகவும்,இன்னொரு கயிறை நான்காகவும் மடித்து மடித்து ஒன்றுக்கு அப்புறம் மற்றொன்றாக கொளுத்தினால்,இரண்டும் எரிந்து முடிக்க 45 நிமிடங்கள் ஆகும் !
2.
(I)5 லிட் நிரப்பி,அதைக் கொண்டு 3 லிட் நிரப்பினால்- இருக்கும் அளவு முறையே 3 லிட்,2 லிட்,3 லிட்.
(II)இப்போது கடைசி 3 லிட் ஐ 8 லிட் க்கு மாற்றி விட்டு,5 லிட் ல் இருக்கும் 2 லிட் ஐ 3 லிட் க்கு மாற்றவும்.இப்போது முறையே 6 லிட்,காலி,2 லிட் இருக்கும்.
(III)மீண்டும் 5 லிட் ல் முழுதும் ஊற்றவும்,இப்பொது அளவு முறையே
1 லிட்,5 லிட்,2 லிட்.
(IV)இப்போது இரண்டாவது 5 லிட் இருந்து மூன்றாவது 3 லிட் ஐ(ஏற்கனவே அதில் 2 லிட் இருக்கிறது) நிரப்பவும்.இப்போது
முறையே 1 லிட்,4 லிட்,3 லிட்.
முதலையும் கடைசியையும் சேர்த்தால் 4 லிட்,4 லிட்..
டட்டடாங்ங்ங்!!!!!!!!!!!...........

 
At Thursday, October 18, 2007 7:48:00 AM , Blogger இலவசக்கொத்தனார் said...

ஒரு கயிற்றின் பாதி அளவை குறித்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு முனையைப் பற்ற வைக்கவும். அந்த கயிறு பாதி எரிந்த உடன் மறு முனையைப் பற்ற வைக்கவும். இப்பொழுது இரு முனைகளிலும் எரிவதால் அரை மணி நேரம் எரியக் கூடிய இரண்டாம் பாதி 15 நிமிடங்களில் எரிந்து விடும். இப்படிச் செய்தால் இரண்டாம் கயிறு தேவையே இல்லையே?

 
At Thursday, October 18, 2007 8:31:00 AM , Blogger இலவசக்கொத்தனார் said...

முதலில் 5 லிட்டர் பாத்திரத்தை நிரப்பவும். (3 - 5 - 0)

5 லிட்டர் பாத்திரத்தில் இருந்து மூன்று லிட்டர் பாத்திரத்தை நிரப்பவும் (3-2-3)

மூன்று லிட்டர் பாத்திரத்தில் உள்ளதை 8 லிட்டர் பாத்திரத்தில் விடவும் (6-2-0)

5 லிட்டர் பாத்திரத்தில் உள்ளதை மூன்று லிட்டர் பாத்திரத்தில் விடவும். (6-0-2)

8 லிட்டர் பாத்திரத்தில் இருந்து 5 லிட்டர் பாத்திரத்தை நிரப்பவும் (1-5-2)

5 லிட்டர் பாத்திரத்தில் இருந்து 3 லிட்டர் பாத்திரத்தை நிரப்பவும். ஒரு லிட்டர் தண்ணீர் இடம் மாறும் (1-4-3)

3 லிட்டர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை 8 லிட்டர் பாத்திரத்தில் விடவும். (4-4-0).

சரியாப் போச்சா? :))

 
At Thursday, October 18, 2007 12:45:00 PM , Blogger பாலராஜன்கீதா said...

1. முதலாவது கயிறின் இரு முனைகளிலும் இரண்டாவது கயிறின் ஒரு முனையிலும் பற்ற வைத்துவிடுங்கள். [பத்த வச்சிட்டயே ...... :-) ]
முதல் கயிறு அரை மணி நேரத்தில் முழுதும் எரிந்து விடும். இப்போது பாதி வரை எரிந்த இரண்டாம் கயிறின் இன்னொரு முனையிலும் பற்ற வைத்து விடுங்கள். கால் மணி நேரத்தில் இரண்டாவது கயிறும் முழுதும் எரிந்து விடும்.
அதாவது இதுவரை ஆன மொத்த நேரம் 45 நிமிடங்கள்.

 
At Friday, October 19, 2007 12:07:00 AM , Blogger Kodees said...

கயிறுகள் இரண்டும் சம அகலம் கொண்டவையோ, பாதி எரிய பாதி நேரம் ஆகும் என்பதோ கிடையாது
(ஒரு இடத்தில் தடித்தும், ஒரு இடத்தில் மெலிந்தும் இருக்கலாம்)

 
At Friday, October 19, 2007 12:12:00 AM , Blogger Kodees said...

பாலராஜன்கீதா - சரி
இலவசக்கொத்தனார் - 1 தவறு, 2சரி
அறிவன் - 1 தவறு, 2சரி
வவ்வால் - 1 தவறு, 2சரி
யோசிப்பவர்- உங்கள் கேள்வியை நான் முதலிலிலேயே பார்க்கவில்லை சாரி!

 
At Friday, October 19, 2007 2:39:00 AM , Blogger யோசிப்பவர் said...

சாரியெல்லாம் எதுக்கு? நான் அதை சொன்னதற்கு காரணம், நானும் முன்பே இதைக் கேட்டிருக்கிறேன் என்று தெரியப்படுத்ததான். வேறொன்றுமில்லை.;-)

 
At Friday, October 19, 2007 3:27:00 AM , Blogger வவ்வால் said...

நான் சொன்னதுக்கு கிட்ட தட்ட ஒத்த பதிலை தான் பாலராஜன்கீதாவும் சொல்லி இருக்கிறார்கள்,
//அல்லது ஒரு கயிற்றினை இரண்டு முனையிலும் பற்ற வைத்து விட்டால் அது அரைமணி மட்டுமே எரியும். அடுத்தக்கயிற்றினை , சரிபாதியாக வெட்டி அதனையும் இரு முனையிலும் பற்ற வைத்தால் கால் மணி மட்டுமே எரியும் ,இப்போது முக்கால் மணி நேரம் கணக்கிடலாம்!//

//முதலாவது கயிறின் இரு முனைகளிலும் இரண்டாவது கயிறின் ஒரு முனையிலும் பற்ற வைத்துவிடுங்கள். [பத்த வச்சிட்டயே ...... :-) ]
முதல் கயிறு அரை மணி நேரத்தில் முழுதும் எரிந்து விடும். இப்போது பாதி வரை எரிந்த இரண்டாம் கயிறின் இன்னொரு முனையிலும் பற்ற வைத்து விடுங்கள். கால் மணி நேரத்தில் இரண்டாவது கயிறும் முழுதும் எரிந்து விடும்.
அதாவது இதுவரை ஆன மொத்த நேரம் 45 நிமிடங்கள்.//

ஒரு வேளை நான் வெட்டாமல் செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டுமா?

 
At Friday, October 19, 2007 5:05:00 AM , Blogger இலவசக்கொத்தனார் said...

ஏன் தவறென்று சொல்லவே இல்லையே.

 
At Monday, October 22, 2007 5:27:00 AM , Blogger Kodees said...

வவ்வால், கயிறை சரிபாதியாக மடித்தால் சரியாக வராது, ஏனென்றால் கயிறு ஒரே அகலம் கொண்டதல்ல

இலவசக்கொத்தனார் - உங்களுக்கும் அதே பதில்தான். கயிறு ஒரே அகலம் என்றால்தான் நீங்கள் சொன்ன பதில் சரியாக வரும்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home