புதிர் எண்-6
ஒரு செல்வந்தர் தன் சொத்துக்களை ஒரு உயில் எழுதிவைத்துவிட்டு செத்துப் போய்விட்டார். அந்த உயிலில் "எனது மகன்கள் இருவரும் தத்தம் காரில் வீட்டிலிருந்து புறப்பட்டு மகாபலிபுரம் செல்ல வேண்டும், ஆனால் எந்த காரின் சொந்தக்காரன் கடைசியாக மகாபலிபுரத்தை அடைகிறானோ அவனுக்கே என் முழு சொத்தும்" என்று இருந்தது.உடனே இருவரும் தத்தம் காரில் மனம் போன போக்கில் சுற்றித்திரிந்தார்களே தவிர மகாபலிபுரத்தை அடைய முயற்சிக்கவில்லை. நாட்கள் கடந்தன, இருவருக்கும் வாழ்க்கை வெறுத்துப்போய் உங்களிடம் வந்து யோசனை கேட்கிறார்கள்.
நீங்கள் என்ன யோசனை சொல்லி இந்தப் பிரச்னையைத்தீர்ப்பீர்கள்
9 Comments:
ரெண்டு பேருக்கும் காரை மாத்திக்கொடுத்துட்டா போதும் போட்டி போட்டுக்கிடு மகாபலிபுரம் போய்டு்வாங்க, காரணம் எந்த காரின் சொந்தக்காரன் கடைசியில் போகிறானோ என்று இருப்பதால் கார் போறது தான் கணக்கு!
ஆனாலும் புதிர் ரொம்ப பழசு! புதுசா முயற்சி செய்யுங்க!
பேசாம 'ஒருத்தர் காரை இன்னொருத்தர் எடுத்துக்கொண்டு யார் முதலில் போய் சேருகிறார்களோ.... ' என்று போட்டி நடத்தினால் போச்சு! சரியா?:-)
அண்ணன் காரை தம்பியிடமும் தம்பி காரை அண்ணனிடமும் கொடுத்து விடவும்
காசி ஆறுமுகம் & வவ்வால் சரியான விடை. வவ்வாலின் சவாலை ஏற்று எனது அடுத்த புதிர் பார்க்க - புதிர் எண் - 7
Pen and Scale Web Designers - சரியான விடை.
சுலபமான கேள்வி போல - எல்லோரும் சரியான விடை.
காரின் சொந்தக்காரன் அப்படின்னுதானே சொல்லி இருக்காங்க. காரை மாத்திக் குடுத்து ஓட்டச் சொல்ல வேண்டியதுதான்.
இலவசகொத்தனாரும் வந்து சரியா கொத்திட்டுப் போய்விட்டார், ம்கூம், யாராவது விடை கேட்டால்தான் இவர்களிம் பின்னூட்டமும், விடையும் (இரண்டும் ஒன்னுதாங்க!)
முதலாவது மகனின் காரை இரண்டாவது மகனிடமும், இரண்டாவது மகனின் காரை முதல் மகனிடமும் கொடுத்து ஓட்டச் சொல்லவும்.
இருவரையும் ஒரு முறை காரை மாற்றிக் கொள்ளச்(Interchange) சொல்வேன்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home