ஹய்யோ! ஹய்யோ!!
மக்களே இப்ப தமிழ்மணத்திலேயும், தேன்கூட்டிலேயும் நடக்கிற அசிங்கமான கூத்துகளைப் பார்க்கும்போது எனக்குத் தோனறதெல்லாம் - "படிப்பு மட்டுமே ஒருத்தருக்கு நாகரீகத்தைக் கொடுக்காது" என்பதுதான். எங்க கிராமத்தில படிக்காதவங்க கூட (அட ஒரு போக்கிரி கூட!) சொல்லக்கூசும் வார்த்தைகளை இவிங்க சர்வசாதரணமா சொல்லறாங்க. இவிங்க ஒரு கோஷ்டியா (ஒரு முடிவோடு!!) ஒரு ஆளைத்தாக்க, அந்தப் பக்கம் அதைவிட மோசமான எதிர்வினை.
எங்க ஊர்ல சொல்லுவாங்கா "ரெண்டு நல்லவங்க எதிர்க்க எதிர்க்க வந்தா மூனு பாதை, ஒரு நல்லவன் ஒரு மோசமானவன் எதிர்க்க எதிர்க்க வந்தா ரெண்டு பாதை, ரெண்டு மோசமானவங்க எதிர்க்க எதிர்க்க வந்தா ஒரே பாதைதான்" அப்படினு.
மேலே சொன்ன பழமொழிய வச்சுப் பார்த்தால் இங்க ஒரே பாதையில் ரெண்டு கோஷ்டி அல்லாடுற மாதிரி தெரியுது.
பெரியார் ஒருமுறை சொன்னதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். (எனது நியாபகத்திலிருந்து) பெரியாரைப் பற்றி ஒருவர் தவறாகப் பிரசாரம் செய்துகொண்டிருந்தாராம், பெரியார் தொண்டர்கள் அது பற்றி பெரியாரிடம் சொல்லி, நீங்கள் அதற்கு மறுப்பு சொல்லவேண்டும் என்று கேட்டனராம். அதற்கு பெரியார் "எனக்கு பிட்டத்தில் சிரங்கு என்று எவனாவது சொன்னால் நான் அப்படி இல்லை என்று ஒவ்வொருத்தரிடமும் சென்று தூக்கிக் காட்டிக்கொண்டிருக்கமுடியாது - கண்டுக்காம நாம நம்ம வேலையைப் பார்ப்போம்" என்று சொன்னாராம்.
எதிர்ப்பு வேண்டியத்துதான், ஆனால் இப்படியா? "ஒரு முட்டாளுடன் விவாதம் செய்யாதே, அப்புறம் யார் முட்டாள் என்று தெரியாமல் போய்விடும்" என்பது இந்தப் படித்த மேதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டது.
ம்! ஹய்யோ! ஹய்யோ!!
6 Comments:
யாரோ ஒருவன் அய்யா,
அய்யா, என்ன சொல்ல வர்றீங்க?இரண்டு குரங்கு கும்பலுக்கும் பிட்டத்துல சிரங்கு,அதனால காமிக்கறாங்கன்னா?என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த இரண்டு கும்பலுமே(திராவிட லூசுக்களான செல்லா அண்ட் கோ மற்றும் பெரியாரிஸ்ட்கள் என்று வர்ணித்துக் கொள்ளும் வி க கோஷ்டி)எப்பவும் கேவலமாக எழுதும் அகம்பாவம் பிடித்த,ஜாதி வெறி பிடித்த குரங்கு கும்பல் தான்.பிரச்சனை என்னன்னா,ரெண்டு கும்பலுமே தங்களை மனுஷ குரங்கு இனம்னு நினைத்துக்கொள்வது தான்.
பாலா
கண்ட கூழைக் கும்பிடு வெல்லாம் குளிர் காயும் படியும்,தங்களுக்குப் பிட்டத்தில் இருக்கும் புண்ணைக் கூழைக் கும்பிடு சொறிந்து விடுவதையும் பார்த்தாவது அமைதி காத்திட வேண்டாமா?
நான் கூட இப்படி ஏதாவது ஒரு பதிவ போட்டிருப்பேன், எனக்கும் இந்த கலீஜ் மடல் எல்லாம் வராம் இருந்திருந்தா.
தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலியும், வவுத்து வலியும்.
'அங்க' கட்டின்னா தூக்கிக் காட்டாம இருந்திடலாம்.
சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் பல செயல்கள் செய்யப்பட்டதால், அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை.
ரெண்டு வருஷமா இருக்காமே இந்த சாக்கடை. எல்லாரும் பொறுமை காத்தா தானா சரியாயிருக்கணுமே?
பொறுமையை ஒரு பலவீனமா பாக்கர சாக்கடையை கழுவ, இந்த மாதிரி ஏதாவது தடாலடி பண்ணாதான் சரி வரும்.
ஆனா, நையாண்டி பதிவுகள் போடுவது, அவன் வீட்டுப் பெண்கள் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற காரியங்களைத் தவிர்க்கலாம்.
எவ்வளவு சீக்கிரம் இதை ஒதுக்க முடியுமோ ஒதுக்கிவிட்டு அடுத்த வேலையைப் பாக்க போணும்.
சர்வேசன், எனக்கும் இப்படி கலீஜ் பின்னூட்டம் வந்தது. நான் அவன் பதிவிலேயே போய் மிரட்டிவிட்டு வந்தேன். அவனைவிட கலீஜாக (கத்தி ரெண்டு பக்கமும் வெட்டும் என அவனுக்கு உணர்த்தினேன்). பொது இடத்தில் சண்டைபோட்டு நாறடிக்கவில்லை!.
அப்புறம் சண்டை போடறவங்க எல்லாம் முன்னாள் நண்பர்களாமே! "உன் நண்பன் யாரெனச் சொல் நீ யாரென்று சொல்கிறேன்" - அப்படீங்குற ஸ்கேலை வச்சு இவிங்களை எடை போடுங்க!
//கத்தி ரெண்டு பக்கமும் வெட்டும் என அவனுக்கு உணர்த்தினேன்//
நான் அது கூட செய்யாமதான் இருந்தேன். வந்த மடல்களை ஃபில்டர் பண்ணி ஒதுக்கி வந்தேன். ஏன்னா, இவன் நம்ம சொன்னாலும் சொரண ஏராத மனநோய் பிடிச்சவன்.
அப்பரம் போலி தளங்கள், போலி பின்னூட்டம் அது இதுன்னு பண்ண ஆரம்பிச்சப்பரம்தான் நிலவரத்தின் தீவிரம் புரிந்தது.
அனானியான எனக்கே இவ்வளவு சங்கடம்னா, உண்மை பெயரில் பதிவு எழுதர ஆளுங்களுக்கு என்னென்ன சங்கடங்கள் வரும்? சிலரின் வீட்டுப் பெண்களின் புகைபடம் வைத்தெல்லாம் பல அவதூறுகள் செய்துள்ளான்.
வெட்கம் கெட்டவன். கேக்காம விட்டா, நாளைக்கு நமக்கும் இதே ப்ரச்சனை வரலாம். வந்தது.
பொது இடத்தில் அசிங்க சண்டை போடுவது எனக்கும் ஒவ்வாத விஷயமே. ஆனால், குட்டக் குட்டக் குனியும் நோஞ்சான் இல்லைன்னும் காட்டணுமே?
அவன் பழைய நண்பர்கள் என்று சிலரை சொல்வதெல்லாம் ஆச்சரியம்தான். பார்ப்போம் இன்னும் என்னென்ன வெளியில் வருதுன்னா.
யார் நண்பன், யார் விரோதின்னாவது தெரிய வரட்டுமே ;)
///அனானியான எனக்கே இவ்வளவு சங்கடம்னா, உண்மை பெயரில் பதிவு எழுதர ஆளுங்களுக்கு என்னென்ன சங்கடங்கள் வரும்?///
இந்தக் காரணத்தால்தான் நானும் அடையாளம் மறைத்து எழுதுகிறேன். மேலும் இனையத்தில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது தெரிவதில்லை அதனாலும் கூட. அப்புறம் இன்னொரு விஷயம் - நம்மைப்பத்தித் தெரிந்தால் உடனே நாம பேசற விஷயத்தை விட்டு ஆள் மேல உள்நோக்கம் கற்பிப்பார்கள். எல்லாம் பார்த்து சிரிக்கத்தான் தோன்றும்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home