Tuesday, October 03, 2006

ராஜ்வனஜ் - க்கு சில கேள்விகள்


"இந்தியா என் சகோதரன் கையில் கொடுத்திருப்பது - மலம்"

என்ற தலைப்பில் திரு. rajavanaj அவர்கள் பதிவைப் பார்த்தேன். அட! அட!!, அங்கே அவர் மேற்படி தலைப்பில் பாட, ஒரு கோஷ்டியே அதற்கு தாளம் போட - ஒரே அமர்க்களம் போங்கள். நான் இட்ட பின்னூட்டத்திற்கு பதிலாக - எனக்குத் தெளிவு இல்லை என்ற பதில். ஐயா!, எனக்கு சில கேள்விகள், தயவு செய்து என்னைத் தெளிவு படுத்துங்கள்.

1. என் சகோதரன் -இந்த சகோதர பாசம் பற்றி எனக்கு ஒரு குழப்பம், ஏழைகள் மட்டும்தான் உங்கள் சகோதரன் ஆக முடியுமா? அதிலும் படிக்காத ஏழைகள் மட்டும்தான் உங்கள் சகோதரன் ஆக முடியுமா? அதிலும் ஓட்டுள்ள படிக்காத ஏழைகள் மட்டும்தான் உங்கள் சகோதரன் ஆக முடியுமா? சுதந்திரம் வாங்கி இத்தனை நாள் ஆகியும் உங்கள் சகோதரன் வேறு வேலையே தெரியாமல் உங்கள் வாயைப் பார்த்துக்கொண்டே மலம் அள்ளிக் கொண்டே இருக்கிறானா? "ஆட்கள் தேவை" போர்டுகள் தொங்கிக் கொண்டே இருக்கும் ஊர்கள் பல உள்ளதே உங்கள் சகோதரன் அதைக் கவனிக்கவில்லையா? ஓ!, படிக்கவில்லை அல்லவா!, உம் போன்ற சகோதரர்கள் படித்துச் சொல்லலாமே? அப்படியென்ன வேலை இல்லாதவர்களின் கடைசிப் புகலிடமா மலம் அள்ளுவது? எத்தனை பேர் வேறு வேலை செய்யவில்லை? இல்லை மலம் அள்ளச் சொல்லி இப்போது யாராவது கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? இந்தியர்கள் மட்டும்தான் உங்கள் சகோதரனா? இல்லை மனிதர்கள் அனைவரும் உங்கள் சகோதரனா? மனிதர்கள் மட்டும்தான் உங்கள் சகோதரனா? இல்லை உயிரினங்கள் அனைத்தும் உங்கள் சகோதரனா?


2. மலம் அள்ளுவது என்ன கேவலமா? நம் ஒவ்வொருவர் உடம்பிலும் சிறிதளவு மலம் உள்ளதுதானே. மலத்தைத் தொடாதவர்கள் நம்மில் யாராவது உண்டா? எந்த தொழிலும் சிறந்ததுதானே?. (உடனே ஏன் நீ அதைச் செய்யக் கூடாது என பதில் கேள்வி வேண்டாம், நான் அல்ல இந்த உலகில் யாவரும் when inevitable எதையும் - எதையும் செய்பவர்களே) மலம் கேவலமா? அதை உற்பத்தி செய்யும் பயனற்ற மனிதன் கேவலமா?

3. "இந்தியா என் சகோதரன் கையில் கொடுத்திருப்பது - மலம்" - இந்தியா எப்போது கொடுத்தது? ஓ!! இந்திய அரசாங்கமோ? சரி, ஒரு அரசாங்கம் உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் என்னதான் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள். அடுக்கு மாடி குடியிருப்பும், தினம் ஐநூறு பணமுமா? ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பை வாடைகைக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தில் சாராயம் போடும் உங்கள் சகோதரர்களுக்கு அரசாங்கம் என்னதான் செய்ய வேண்டும். கல்வியில், வேலையில் என இட ஒதுக்கீடு அளித்தும் மலம்தான் அள்ளுவேன் எனும் உங்கள் சகோதரர்களுக்கு வேறு என்னதான் வேண்டும்?

4. இது Survival of the FITTEST!- உலகம். போராடுங்கள், வெல்லுங்கள். குறை சொல்லிப் புலம்பாதீர்கள். Nothing is GRANTED!. உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லுங்கள், சொல்லுவீர்களா?

அன்புடன்

28 Comments:

At Tuesday, October 03, 2006 3:07:00 AM , Blogger Muthu said...

இது ரொம்ப ஓவர் :(

 
At Tuesday, October 03, 2006 3:08:00 AM , Blogger வசந்தன்(Vasanthan) said...

எனக்கொரு குழப்பம்.
"யாரோ" என்ற பேரில் இரண்டுபேர் வலைப்பதிவில் எழுதுகிறீர்களே, ஒருவராவது பெயரை மாற்றக்கூடாதா?

 
At Tuesday, October 03, 2006 3:48:00 AM , Blogger Kodees said...

வசந்தன், குழப்பத்திற்கு Sorry!, மாற்ற முடியுமானால் முயற்சிக்கிறேன். பெயர் ஒன்று suggest செய்யுங்களேன்.

 
At Tuesday, October 03, 2006 4:05:00 AM , Blogger Kodees said...

வசந்தன்,மாற்றிவிட்டேன், அந்த யாரோ - சீனியர், so நான் மாற்றிவிட்டேன்

 
At Tuesday, October 03, 2006 5:18:00 AM , Blogger லிவிங் ஸ்மைல் said...

// 4. இது Survival of the FITTEST!- உலகம். போராடுங்கள், வெல்லுங்கள். குறை சொல்லிப் புலம்பாதீர்கள். Nothing is GRANTED!. உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லுங்கள், சொல்லுவீர்களா? //

காலங்காலமாக ஒரு குழுவை/இனத்தை அடக்கி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா(னை)ப் போல அதிமேதாவித்தனம் பேசும் ஒருவரே, எல்லாம் வல்ல சுகங்களோடு பிறந்து வளர்ந்து விட்ட தங்களால் நிதர்சனத்தின் வலியை புரிந்து கொள்ள முடியாதது ஆச்சரியம் இல்லை தான்.

வேண்டுமானால் தங்களது சொத்து, ஜாதி அடையாளம், பாதுகாப்பான கல்வி இதையெல்லாம் துறந்து விட்டு. ஆட்கள் தேவை போர்டில் மாதம் 1,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து உழைத்து, முன்னேறி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்களேன்.

 
At Tuesday, October 03, 2006 5:28:00 AM , Anonymous Anonymous said...

உண்மையில், உங்கள் கேள்விகள் சார்பற்ற நியாயமான கேள்விகள் தான்.

//இது Survival of the FITTEST!- உலகம். போராடுங்கள், வெல்லுங்கள். குறை சொல்லிப் புலம்பாதீர்கள். Nothing is GRANTED!. உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லுங்கள், சொல்லுவீர்களா?//


இதைத் தான் நமது சகோதரர்கள் உணரவேண்டும். இடஒதுக்கீடு கேட்டுக்கொண்டேயிருந்தால், எல்லா நாடுகளும் நம்மை பின்னுக்குத்தள்ளி விட்டு முன்னேறிப்போய் விடும். இந்தியா என்றும் பதினாராய் இளமையோடு(!) முன்னேறிக்கொண்டேயிருக்கும்.


நமது இந்தியர்கள் ஒலிம்பிக்ஸில் போய் கூட இட ஒதுக்கீடு கேட்டாலும் கேட்பார்கள்.

 
At Tuesday, October 03, 2006 5:54:00 AM , Blogger Kodees said...

///வேண்டுமானால் தங்களது சொத்து, ஜாதி அடையாளம், பாதுகாப்பான கல்வி இதையெல்லாம் துறந்து விட்டு. ஆட்கள் தேவை போர்டில் மாதம் 1,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து உழைத்து, முன்னேறி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்களேன்.///

இந்த மாதிரி கேள்விகளை எதிர்பார்த்தேன், நான் ஏங்க அப்படி கஷ்டப்படனும், இது என்ன சவாலுக்கு சவாலா?. ஆனா, நான் மலம் அள்ளிட்டிருந்தா, நிச்சயமா ஆட்கள் தேவை போர்டில் வேலைக்குச் சேர்வேன், முடியலையா, முகம் சுளிக்காமல் மலம் அள்ளும் வேலையைச் செய்வேன்.

///காலங்காலமாக ஒரு குழுவை/இனத்தை அடக்கி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா(னை)ப் போல அதிமேதாவித்தனம் பேசும் ஒருவரே///

ஏங்க, இதில் பாப்பான் எங்கே வந்தான்.

/// எல்லாம் வல்ல சுகங்களோடு பிறந்து வளர்ந்து விட்ட தங்களால் நிதர்சனத்தின் வலியை புரிந்து கொள்ள முடியாதது ஆச்சரியம் இல்லை தான்.///

வலியைப் புரிந்து கொண்டு, ஆஹா, பரிதாபம் இவர்கள், இந்த நாடு இவர்களுக்கு என்ன செய்தது என்று சொல்லும் உங்களை விட, பிழைக்க வழி சொல்லும் நான் எந்த விதத்தில் குறைச்சல்?

வலி யாருக்கு இல்லை?, அவரவர்க்கு அவரவர் வலி, இதில் உன் வலி பெரிதா, என் வலி பெரிதா என்றால் பதில்? வலியைச் சொல்லாதீர்கள், வழியைச் சொல்லுங்கள்.

 
At Tuesday, October 03, 2006 5:57:00 AM , Blogger Kodees said...

தட்டிக்கேட்பவன், நான் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவன் அல்ல, தாங்கள் என் கருத்தைத் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். இட ஒதுக்கீடு பெற்றும் என் சகோதரன் கையில் மலம் என்று புலம்புகிறார்களே என்றுதான் கேட்டேன்.

இட ஒதுக்கீடு பற்றி ஒரு தனி கச்சேரி வைத்துக் கொள்வோம்.

 
At Tuesday, October 03, 2006 5:57:00 AM , Blogger அருண்மொழி said...

தட்டிக்கேட்பவரே,

தமிழகத்தில் இடஒதுக்கீடு பல வருடங்களாக உள்ளது. வட மாநிலங்களில் இப்போதுதான் இடஒதுக்கீடு நுழைகின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தகுதியும், திறமையும் உள்ள (ஆ)சாமிகள்தான் படித்து, பட்டம் பல பெற்று, பெரும் பதவிகளில் அமர்ந்து இருக்கின்றனர். உங்களின் கூற்றுப்படி நமது நாடு ஒரு வல்லரசாக உயர்ந்து இருக்க வேண்டுமே?. ஏன் அது நடக்கவில்லை?

இட ஒதுக்கீட்டை இழுத்து உங்களை அடையாளம் காட்டிக் கொண்டுவிட்டீர்கள். மிக்க நன்றி.

 
At Tuesday, October 03, 2006 7:19:00 AM , Blogger bala said...

அருண்மொழி அவர்களே,

"இட ஒதுக்கீடு" என்றதுமே பாய்ந்து வந்ததால் உங்கள் அடையாளமும் தெரிந்து விட்டதே.

பாலா

 
At Tuesday, October 03, 2006 7:31:00 AM , Anonymous Anonymous said...

""""காலங்காலமாக ஒரு குழுவை/இனத்தை அடக்கி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா(னை)ப் போல அதிமேதாவித்தனம் பேசும் ஒருவரே, எல்லாம் வல்ல சுகங்களோடு பிறந்து வளர்ந்து விட்ட தங்களால் நிதர்சனத்தின் வலியை புரிந்து கொள்ள முடியாதது ஆச்சரியம் இல்லை தான்.

வேண்டுமானால் தங்களது சொத்து, ஜாதி அடையாளம், பாதுகாப்பான கல்வி இதையெல்லாம் துறந்து விட்டு. ஆட்கள் தேவை போர்டில் மாதம் 1,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து உழைத்து, முன்னேறி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்களேன்.""""

ரொம்ப புத்திசாலி மாதிரி பேசுரதா நினைப்பா?வாழும்புன்னகை?
இந்த கேள்விக்கு ஞாயமான பதில் சொல்லலாம்...ஆனால் """காலங்காலமாக ஒரு குழுவை/இனத்தை அடக்கி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா(னை)ப் போல """""" என்று எகதாளம் பேசும் உங்களைப் போன்றவருக்கு தேவையில்லை...

எல்லா இடத்திலும் தன் நிலமையை சொல்லி/காட்டி அடுத்தவர் தயை நாடும் உங்களைப் போன்றவர்களால் கூட்டத்துடன் சேர்ந்து கோஷம் போட முடியுமே தவிர... இதற்கு மேல் சிந்திக்க முடியாது..SO BE IT.....

 
At Tuesday, October 03, 2006 10:20:00 AM , Blogger கால்கரி சிவா said...

//போராடுங்கள், வெல்லுங்கள். குறை சொல்லிப் புலம்பாதீர்கள். Nothing is GRANTED!. உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லுங்கள், சொல்லுவீர்களா?//

முத்து(தமிழினி) said...
இது ரொம்ப ஓவர் :(


போரட சொல்வது ஒவரா? வந்து ஜாலியா குந்து என சொல்வது ஒவரா?

 
At Tuesday, October 03, 2006 10:26:00 AM , Blogger கால்கரி சிவா said...

//வேண்டுமானால் தங்களது சொத்து, ஜாதி அடையாளம், பாதுகாப்பான கல்வி இதையெல்லாம் துறந்து விட்டு. ஆட்கள் தேவை போர்டில் மாதம் 1,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து உழைத்து, முன்னேறி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்களேன்//

லிவிங் ஸ்மைல்,

இவ்வாறு வாழ்ந்து வென்றவர்கள் பலர். அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

இரவு பகல் கண்விழித்து இளமைகளை தொலைத்துவிட்டு படித்து பட்டம் பெற்று உயர் பதவியில் அமர்ந்தும் அங்கேயும் இரவு பகல் பாரமல் உழைப்பது (உழைப்பது என்றால் சாமான் தூக்கி வைப்பது மலம் அள்ளுவது மட்டுமல்ல) உங்களுக்கு ஈசியாக தெரிகிறது. அங்கே வந்து அமர்ந்தால் தெரியும் வலிகள்

 
At Tuesday, October 03, 2006 12:32:00 PM , Blogger வஜ்ரா said...

அருண் மொழி சூத்திரம்(formula)

இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு ஆள் = மேல் ஜாதி, possibly பார்ப்பான், இல்லையென்றால் இந்துத்வா குழந்தை.

இட ஒதுக்கீடுக்கு ஆதரவு ஆள் = நடு நிலை வா(ந்)தி, அறிவு வாளி, நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர்.

//
தமிழகத்தில் இடஒதுக்கீடு பல வருடங்களாக உள்ளது. வட மாநிலங்களில் இப்போதுதான் இடஒதுக்கீடு நுழைகின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தகுதியும், திறமையும் உள்ள (ஆ)சாமிகள்தான் படித்து, பட்டம் பல பெற்று, பெரும் பதவிகளில் அமர்ந்து இருக்கின்றனர்.
//

ஆஹா, ஒரு உண்மையை ஒத்துக் கொண்டதற்கு பாராட்டியே ஆகவேண்டும்...

தமிழகத்தில் இடஒதுக்கீடு பல வருடங்களாக உள்ளது...என்பது தான் அது.

தமிழகம், வட மானிலமான, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரத்தை விட பின் தங்கித்தான் இருக்கிறது. தமிழக்த்தில் பீஹார் உ.பி யை இழுத்துச் செல்ல எவ்வளவு கஷ்டமோ அதே அளவு வேதனை தரும் கஷ்டம் இந்த முன்னேறிய மானிலங்களிலும் பார்க்கலாம். இதில் இட ஒதுக்கீட்டுக்கு சம்பந்தம் இல்லை.

அரசின் தலையீட்டினால் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது. அரசு டீக்கடையும் மளிகைக்கடையும் நடத்துவதை விடுத்து, பாதுகாப்பு, health care, அடிக்கடி சொல்லப் படும் bijli, sadak, paani மின்சாரம், சாலைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

What ever india has achieved is not because of the government, it is inspite of the government.

 
At Tuesday, October 03, 2006 11:35:00 PM , Blogger Kodees said...

///ரொம்ப புத்திசாலி மாதிரி பேசுரதா நினைப்பா?வாழும்புன்னகை?
இந்த கேள்விக்கு ஞாயமான பதில் சொல்லலாம்...ஆனால் """காலங்காலமாக ஒரு குழுவை/இனத்தை அடக்கி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா(னை)ப் போல """""" என்று எகதாளம் பேசும் உங்களைப் போன்றவருக்கு தேவையில்லை...

எல்லா இடத்திலும் தன் நிலமையை சொல்லி/காட்டி அடுத்தவர் தயை நாடும் உங்களைப் போன்றவர்களால் கூட்டத்துடன் சேர்ந்து கோஷம் போட முடியுமே தவிர... இதற்கு மேல் சிந்திக்க முடியாது..SO BE IT..... ///

அருமையான கருத்து. பெயர் போட்டே எழுதலாமே!!

 
At Wednesday, October 04, 2006 12:11:00 AM , Blogger Muthu said...

//மலம் அள்ளுவது என்ன கேவலமா? நம் ஒவ்வொருவர் உடம்பிலும் சிறிதளவு மலம் உள்ளதுதானே. மலத்தைத் தொடாதவர்கள் நம்மில் யாராவது உண்டா? எந்த தொழிலும் சிறந்ததுதானே?//

இது தான் ரொம்ப ஓவர்... இதைப்பற்றி கால்கரியவர்களின் கருத்து என்ன?இந்த வாக்கியம் எழுதியவர் மனோபோக்கின் காரணமாக பதிவே ஓவராகிவிட்டது:))

பொதுவாக தனக்கு தேவையான வாக்கியத்தை மட்டும் எடுத்துகிட்டு கால்கரியும் ஓவரா விளையாடுறாரு:))

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற பாட்டு ஞாபகம் வருது..(எது ஓவர்னு நான் சொன்னேன்னு சொன்னாரே..அந்த வாக்கியத்தை நெனச்சா..)

 
At Wednesday, October 04, 2006 3:46:00 AM , Blogger Kodees said...

ராஜவனஜ் - I'm waiting...

 
At Wednesday, October 04, 2006 5:57:00 AM , Anonymous Anonymous said...

1.பெயர் போட்டுதானே எழுதியிருக்கிறேன் அனானிமஸ் என்று...:))இது வலையுலகில் அண்ணன்மார்கள் எனக்கு வைத்த செல்லப் பெயர்

2.அதுவாங்க முக்கியம், விஷயம் தாங்க முக்கியம்..அப்படீன்னு யாரோ சொல்லிக் கொடுத்தாங்க

3.ரோட்டுல நின்னு ஓயாம ஊளையிட்டுக்கிட்டுருந்த வெறிநாய விரட்டப் போனேன்...கடிச்சு வச்சிருச்சு...இணைய அண்ணன் அங்கிட்டு வந்தாரு....வெறிநாய் கடிச்சு வச்சுருச்சே அப்படீன்னு பரிதாபப் படுவாருன்னு பாத்தா அண்னன் என்னியவே திட்டுனாரு...ஏண்ணே வெறி நாய விரட்டுனது தப்பா..அப்படீன்னு கேட்டேன்...அறிவு கெட்டவனே...வெறிநாய்னு தெரிஞ்சப்புறம் ஏண்டா கிட்ட போகிறாய்...தூரக்க நின்னு கல்லால அடிச்சு விரட்டணும்டா...அப்படீன்னாரு
நல்லது சொன்னா ஏத்துக்கிடணுமுங்க

 
At Sunday, November 05, 2006 10:21:00 PM , Blogger BadNewsIndia said...

யாரோ ஒருவன், ரொம்ப நல்ல பதிவு.
வழக்கம் போல், 'ஒடுக்கப்பட்டவர்'களின் சார்பாக குரல் கொடுக்கும் ஒரு கூட்டம் பின்னூட்டத்தில்.

மலம் அள்ளுவது கேவலம் அல்ல (திருடன், கற்பழிப்பவன், முரடன், கயவன், சுயநலவாதி, இவர்களை விட பல மடங்கு மேலானவன் துப்புரவு தொழிலாளி).

எல்லா மனிதனும், தேவை என்று வந்து விட்டால் அவன் பசி போக்கவும், அவன் குடும்பத்தின் பசி போக்கவும், மலம் என்ன எதை வேண்டுமானாலும் அள்ளுவான். இது எனக்கும் பொறுந்தும் உங்களுக்கும் பொருந்தும்.

சும்மா உயர்ந்த ஜாதிக்காரன் ஒடுக்கி விட்டான் என்று பாட்டு படிப்பதைவிட உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். 'ஒடுக்கப்பட்டவனுக்கு' உதவுங்கள். அவன் குழந்தையின் கல்விக்கு வகை செய்யுங்கள். அல்லது வேறு நல்ல வேலை வாங்கிக் கொடுங்கள். என் தெருவில் வேலை செய்யும் துப்புர தொழிலாளியிடம் கேட்டேன். "ஏங்க சாக்கடை அள்ரீங்களே தினமும். கஷ்டமாயில்லயா?" அதர்க்கு அவன் சொன்னது "அதெல்லாம் இல்ல சார். இத்துவும் வேல தான்".

இன்னும் எத்தனை நாள்தான் 'ஒடுக்கப்பட்டவன்' பெயர் சொல்லி, ஓட்டு வாங்கி குளிர் காயப்போகிறீர்கள்.

60 வருஷம் ஆச்சு, இன்னும் அவன் அள்றான்னா அதுக்கு யாருய்யா காரணம், இதில் பின்னூட்டங்கள் இட்டு உருப்படியா ஒண்ணும் பண்ணாதவங்கதான? வாயை மென்றால் மட்டும் பத்தாது.

இது தொடர்பான எனது பழைய பதிவு:
Bad News India - மெத்தனமாக இருக்காதீர்கள்!!: மனிதர்களா நாமெல்லாம்? தூ !!!

 
At Thursday, November 09, 2006 12:37:00 AM , Blogger மாதவன் said...

பாப்பார பசங்களை நினைத்தால் சிரிப்பா வருது.

 
At Thursday, November 09, 2006 12:38:00 AM , Blogger மாதவன் said...

பாப்பார பசங்களை நினைத்தால் சிரிப்பா வருது.

 
At Saturday, December 02, 2006 5:12:00 AM , Blogger வஜ்ரா said...

இஸ்லாம் தான் ராஜவனஜர் சகோதரரின் கையில் பீ அள்ளிப் போட்டார்கள் என்று ப்ரூவ் ஆயிருச்சாம்ல..?

ராஜவனஜர் இதுக்கெல்லாம் வருவாரா...அவரு, அள்ளுன பீ யை அடுத்தவன் மேல வீசி எறிஞ்சிட்டு ஓடிப் போகத்தான் தெரியும்.

 
At Friday, December 15, 2006 10:18:00 PM , Blogger கார்மேகராஜா said...

///இஸ்லாம் தான் ராஜவனஜர் சகோதரரின் கையில் பீ அள்ளிப் போட்டார்கள் என்று ப்ரூவ் ஆயிருச்சாம்ல..?

ராஜவனஜர் இதுக்கெல்லாம் வருவாரா...அவரு, அள்ளுன பீ யை அடுத்தவன் மேல வீசி எறிஞ்சிட்டு ஓடிப் போகத்தான் தெரியும்.///


இந்த பின்னூட்டம் எடுக்கப்பட்டால் பதிவு நன்றாக இருக்கும்.

 
At Friday, December 15, 2006 11:19:00 PM , Blogger bala said...

//ராஜவனஜர் இதுக்கெல்லாம் வருவாரா...அவரு, அள்ளுன பீ யை அடுத்தவன் மேல வீசி எறிஞ்சிட்டு ஓடிப் போகத்தான் தெரியும்.//


எங்கள் புரட்சிகர கட்சியின் அரசியல் வாரிசு,இளைய தளபதி ராஜ்வனஜ் அய்யா,எங்கும் ஓடி மறையவில்லை.
கட்சி கொள்கையின் படி, பாம்பு பிடிப்பது எப்படின்னு ட்ரையினிங் எடுக்க இருளர்கள் கிட்ட போயிருக்கிறாரு.
அவர் வரட்டும்.பேசிக்குறோம்.

பாலா

 
At Saturday, December 16, 2006 12:12:00 AM , Blogger Madhu Ramanujam said...

எங்களுக்கு வாய்ப்பு குடுக்கலை, பார்ப்பனன் எங்களை ஏறி மிதிக்கறான், இப்ப்டி எல்லம் வண்ணமா பேசும் பலர், அதுவும் குறிப்பா சொல்லணும்னா இங்க வந்து பின்னூட்டம் போட்டு வக்காலத்து வாங்கறங்க எல்லாம் என்ன பண்றாங்க? நூறு நொட்டை சொல்லிட்டு, பின்னூட்டம் போட்டுட்டு, பாப்பானைத் திட்டிகிட்டு வீட்ல உட்க்கார்ந்ந்துகிட்டு தான இருக்கீங்க. ஒரு நல்ல உதாரணம் சொல்லணும்னா...

மத்திய அரசு ஓபிசிக்காக கொண்டுவர இட ஒதுக்கீடுல, கிரீமீ லேயரை ஒதுக்க மாட்டோம். அவங்களுக்கும் சலுகை தருவோம்னு சொல்லும்போது, வசதி படைச்ச ஓபிசி எல்லாம் ஒண்ணு சேர்ந்து, இல்லைங்க எங்களுக்கு வேண்டாம்னு சொன்னீங்களா? நீங்க தான அவங்களுக்கு சூனியம் வெக்கிறது? அப்படி இருக்கும்போது மத்தவனை நொட்டை சொல்றது எந்த வகைல நியாயம்?

அதுவும் நம்ம லிவிங் ஸ்மைல் கேள்வி எல்லாம் பாருங்க...

லிவிங்க் ஸ்மைல்...உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டிருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கீங்க. அந்த வித்தைய மத்தவங்களுக்கு சொல்லிக் குடுங்க, அதை விட்டுட்டு அடுத்தவனை மலமள்ளுனு சொல்றது அறிவீனம்னுதான் தோணுதுங்க.

 
At Wednesday, January 10, 2007 7:22:00 AM , Blogger தமிழ் அகராதி said...

TAMIL NADU BEING RESERVED FOR NON-TAMILS WHILE TAMIL BRAHMINS/FORWARDS ARE DRIVEN OUT


Sir

I wish to bring to your attention that many backward castes, most backward caste listed in Tamil Nadu's reserved caste category speak language other than Tamil. The list is seen Tamil Nadu website http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

These includes countless communities where Telugu is spoken at home, also several Kannada speaking caste and Urdu Muslim communities who essentially speak Hindi.

The chairman of Tamil Nadu's minority commision is Pyarelal Jain appointed by Karunanidhi, a Hindi-speaking Jain.

Tamil Brahmins despite being the "biggest scoundrels" according to Karunanidhi are still Tamils. How is that Karunanidhi is reaching out even to North Indians for votes by printing Hindi pamphlets in last election. Why is DMK hating Tamil Brahmins but at the sametime reaching out for North Indians residing in TN.

Many CBSE schools in Tamil Nadu continue to impose Hindi (as compulsory subject), while Tamil can be conveniently skipped. This is sharp contrast to Karnataka where all schools including CBSE school which dont teach Kannada as compulsory subject will be de-recognized. Karunanidhi has come to power the 4th time now. Still the Hindi impositition in CBSE flourishes.

Why are Tamil Nadu's ports of entry i.e airports and ports staffed by people who speak Hindi and dont know Tamil?

Why has Karunidhi failed on his promise to have mandatory Tamil annoucements on all Tamil Nadu flights.

Recently there was court case against use of Tamil as official language in TN and also opposition. Many people who oppose this are also covered under Tamil Nadu reservation.

Why are evils such as 2-tumbler system and seperate well system so prevelent in Southern TN where there is virtually no 'scoundrel' Brahmins left. It seems that amoung BC caste there is lot of descrimination and Dalits are still suffering while the bloody TN govt, Karunidhi etc are wantonly ignoring and supporting this.

It all looks like that the reservation policy is the most convenient means by "Tamil" politicians to destroy Tamil, Tamil society for their personal gains.

Tamil patriots would have done something great if they had reservation for one Tamil caste in TN rather than commercial certificates which many non-Tamil speaker can purchase.

Nandri Vanakkam
தமிழ் சமத்துவம்
http://i.am/tamil


அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

 
At Thursday, January 18, 2007 3:08:00 AM , Anonymous Anonymous said...

i am aasath:

annonyous' joje ia shown above here. He want to shout the Hinhi / urudhu muslims rather than tamil Upper caste. What a favor to nationality of Feudal personality!

Apart fom Rajavanaj i will tell you the answers

1. If you have such honorable/good salaryful job, if you will neutral, you should give the hand to uneducated and poor fellows treat as your brother.
All peoples who suffered in the world are our sisters and brothers (not by us only, read your spiritual vivegananda)...
Do you mean in your last line of 1st quest., that the animals and birds? Before one century Bharathi ask this question to Justice Party. Today you ... You wear the cloth of knowledge by yourself.

2. ok. i accept. do anyone has ready in Uppercaste while without study/Money? Minimum to Physical work to other varnaas ... or Cultivation ... read manushmiruthi first

3. Role of Govt has such limits in today on whole the world. But ready to service to the peoples is basic aim of govt. Today they sold the public properties to the MNCs and Broker Capitalists like Tata and Birla. Do you see the anti-Reservation struggles of Upper University students at delhi. What is the improvement after they got educated? House and liquer -- Your assumption. Read the newspaper like the news of Constuction coolies' massacre by a BPO employee at Mumbai. Do you read Kairanchi issue against dalits?

4. Survival of the Fittest - is correct while you would be the Homozhapeans. If you have got civilised, your culture also improved with/without so-called knowledge.
Nobody can grant RIGHTS. I /our BRORs. also known it. So we will ready to fight against Manu to you on street and net also.

 
At Saturday, September 01, 2007 2:53:00 AM , Blogger ஜீவானந்தம் said...

மலம் அள்ளுவது கேவலமல்லதான்
எங்கே நீங்க கொஞ்சம் அள்ளி பாருங்க
"யாரோ ஒருவன்" அவர்களே.

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான சவாலில் தந்தை பெரியாரின் பணியை செய்துவரும் அனைவருக்கும் உங்கள் கேள்வி அல்பமான கேள்விதான்..

போர்டுகள் போட்டு தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் மட்டுதான் வேலைக்கு ஆள் சேர்க்கிறார்கள் அது தெரியுமா .

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home