Wednesday, August 30, 2006

தி.க வினருக்கு சில கேள்விகள்

மூட நம்பிக்கையை கேலி செய்யும் நீங்கள்
1. கருப்பு சட்டை அணிவது ஏன்?
2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?
3. பெரியாரை கடவுள் ரேஞ்ஜிற்கு உயர்த்துவது ஏன்? (அவருடைய கருத்துக்கள் சிறந்தவை என்றாலும், கருத்துக்களை விட்டு நபரை துதிப்பது ஏன்? - பெரியாரே அதை விரும்பவில்லை என்றாலும் கூட!)

உங்கள் பதிலை வைத்து எனது உப கேள்விகள் தொடரும்.

அன்புடன்.

34 Comments:

At Wednesday, September 20, 2006 11:54:00 PM , Blogger Kodees said...

என் கேள்விக்கு என்ன பதில்?

 
At Thursday, September 21, 2006 12:32:00 AM , Anonymous Anonymous said...

பதில்

1 கருப்பு தான் பிடித்த கலர்.

2 விளம்பரம்

3 அப்பத்தானெ அரசியல் வியாபாரம் பண்ண முடியும்

 
At Thursday, September 21, 2006 1:05:00 AM , Anonymous Anonymous said...

ethina dadavathan pathil sollrathu, ippaaye kanna kattuthey

 
At Thursday, September 21, 2006 1:58:00 AM , Blogger Kodees said...

அப்பா அனானிகளா, பெயர் போடுங்களேன், என்ன தயக்கம்?

 
At Thursday, September 21, 2006 2:23:00 AM , Blogger ஜயராமன் said...

1. கருப்பு சட்டை அணிவது ஏன்?

We were our hearts on our sleeves என்று இங்கிலீஷில் சொல்வார்கள்.

2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?

ஒருநாளாவது காக்கா போன மூச்சாக்களை அலம்பி புதிதாக அதற்கு இடத்தை க்ளீன் பண்ணிக்கொடுப்பதற்குதான்.

3. பெரியாரை கடவுள் ரேஞ்ஜிற்கு உயர்த்துவது ஏன்? (அவருடைய கருத்துக்கள் சிறந்தவை என்றாலும், கருத்துக்களை விட்டு நபரை துதிப்பது ஏன்? - பெரியாரே அதை விரும்பவில்லை என்றாலும் கூட!)

எங்கள் ஊரில் பாம்பாட்டி கீரிப்புள்ளையையும் பாம்பையும் வைத்து விளையாட்டு காண்பிப்பான். அது மாதிரி நாங்கள் ரெண்டு சிலைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். எல்லாம் வயித்துப்பிழைப்புதான்.

இப்ப புரிஞ்சுதா. விடுங்க ஜூட்!!

 
At Thursday, September 21, 2006 2:43:00 AM , Blogger மாசிலா said...

//1. கருப்பு சட்டை அணிவது ஏன்?//
ஒரு அடையாலம். மூட நம்பிக்கையில், யாராலும் விரும்பப்படாத நிறமாக இருந்ததாலும் அதையே சமூக எண்ண ஓட்டத்திற்கு எதிர்ப்பதுபோல் தேர்ந்தெடுத்த நிறம்.


//2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?//
தமிழர் வழக்கம்.


//3. பெரியாரை கடவுள் ரேஞ்ஜிற்கு உயர்த்துவது ஏன்?//
தமிழர்களின் பழக்கவழக்கங்களை நீங்கள் வேறுமாதிரி கோணத்தில்
பார்த்து உங்களுக்குள் ஆயிரம் நினைத்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு?

 
At Thursday, September 21, 2006 3:06:00 AM , Anonymous Anonymous said...

ஜெயராமன் மூச்சா போக இந்த பதிவு தான் கிடைத்ததா?

 
At Thursday, September 21, 2006 3:10:00 AM , Blogger Hariharan # 03985177737685368452 said...

பெரியார் கொள்கைகள் "பெரியார் மதம்" ஆகிப்போச்சு.

1. பெரியார் மத உடை கருப்புச்சட்டை

2. பெரியார் சிலை சுயமரியாதை உருவ வழிபாடு

3. பெரியார் மதத்தினைக் கண்டுபிடித்த ஈ.வே.ராமசாமி வெங்காயம் தலையாய தூதர் ஆவதால்.

பெரியார் மத வழிபாட்டுக் கிளைகளிலிருந்து fatwaக்கள் அனானியாய் வரும் இனி.

கவனமாய் இந்த வலைப்பூ யாரோன்னு பேர் இருப்பதினால் போலி ஆபாச வலைப்பூ தொடங்குவதா என்று பெரியாரி ம(ட)த பிழைப்புவாதிகள் குழம்பி தங்கள் குடும்பப் பெண்களை அநாகரீகமாக முற்போக்காக பெரியார் மத தலைமை தூதர் ஈ.வே.ராமசாமி வெங்காயமும் தாய்த்தமிழும் வெட்கும் அளவுக்கு பின்னூட்டம் இடலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

 
At Thursday, September 21, 2006 3:37:00 AM , Blogger ENNAR said...

பெரியாரே அந்த வயதில் திருமணம் கூடாதென்று செய்து கொண்டாறே நாங்கள் அவரது தெண்டர்கள் என்பதைக் கட்டத்தான்.
கடவுளுக்கு மாலை போடுவதில்லையா
அவர் கடவுள்

 
At Friday, September 22, 2006 1:39:00 AM , Blogger Kodees said...

///மாசிலா :-
/1. கருப்பு சட்டை அணிவது ஏன்?//
ஒரு அடையாலம். மூட நம்பிக்கையில், யாராலும் விரும்பப்படாத நிறமாக இருந்ததாலும் அதையே சமூக எண்ண ஓட்டத்திற்கு எதிர்ப்பதுபோல் தேர்ந்தெடுத்த நிறம்.///

ஏன் பல நிறங்களில் சட்டை இருந்தால் பகுத்தறிவுக்கு பாதகமா?. இப்படித்தானே பல மூட நம்பிக்கைகள் ஆரம்பிக்கின்றன


///2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?//
தமிழர் வழக்கம். ///

ஆ, நல்ல பதில், தமிழர் வழக்கமாம், சாமி கும்பிடுறது, ஆடு வெட்டறதுனு 1000 தமிழர் பழக்கங்கள் இருக்கே அதெல்லாம் அப்ப சரிதான் போல

//3. பெரியாரை கடவுள் ரேஞ்ஜிற்கு உயர்த்துவது ஏன்?//
தமிழர்களின் பழக்கவழக்கங்களை நீங்கள் வேறுமாதிரி கோணத்தில்
பார்த்து உங்களுக்குள் ஆயிரம் நினைத்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு?

நான் பகுத்தறிவை வலியுறுத்திகிறேன், ஆனால் தனி மனித துதிதான் பகுத்தறிவா? பெரியாரை நமக்கு பகுத்தறிவு தந்தவர் என சொல்லுங்கள் சரி ஆனால் பெரியாரை கேள்வி கேட்பவன் பார்ப்பான்/முட்டாள் என்ற வாதம் எந்த வகையில் சேர்ந்தது. கால காலமாக இருந்து வந்த பழக்க வழக்கங்களையே கேள்வி கேட்டு அதை மாற்றியவர், கேள்வி கேட்கச் சொன்னவர். ஆனால் இன்று அவரை பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் பெரியாரை எதிர்த்து கேள்வி கேட்காதே என்பது என்ன நியாயம். பெரியார் என்ன தப்பே செய்யாதவரா? ஏதாவது அவரிடம் குறை சொன்னால் விவாதியுங்கள், அதை பல கோணங்களில் அலசுங்கள், தவறென்று பட்டால் ஒத்துக்கொள்ளுங்கள், மனிதராக பிறந்தவரில் தவறே செய்யாத ஒருவராக அவரை இன்னொறு கடவுள் ஆக்காதீர்கள்


//hariharan said...

பெரியார் கொள்கைகள் "பெரியார் மதம்" ஆகிப்போச்சு.//

ஆம், எனது கருத்தும் அதே.

///கவனமாய் இந்த வலைப்பூ யாரோன்னு பேர் இருப்பதினால் போலி ஆபாச வலைப்பூ தொடங்குவதா என்று பெரியாரி ம(ட)த பிழைப்புவாதிகள் குழம்பி தங்கள் குடும்பப் பெண்களை அநாகரீகமாக முற்போக்காக பெரியார் மத தலைமை தூதர் ஈ.வே.ராமசாமி வெங்காயமும் தாய்த்தமிழும் வெட்கும் அளவுக்கு பின்னூட்டம் இடலாம்.///

ஆம், வந்த்தது, அவர்கள் தரம் அப்படி, அப்படித்தான் பெரியார் சொல்லித்தந்து இருக்கிறார் போல. ஆனால் நான் பார்ப்பனர் அல்ல, எனது கேள்விகள் அவர்களுக்கும் இருக்கு.

 
At Friday, September 22, 2006 2:18:00 AM , Blogger Kodees said...

இந்த அனானி தே....யா பசங்கள் மிரட்டலையெல்லாம் அவன் அம்மாகிட்ட வச்சுக்கலாம், என்கிட்ட வேண்டாம்.

 
At Friday, September 22, 2006 2:28:00 AM , Blogger Kodees said...

பாவம் அருன்குமார்!

 
At Friday, September 22, 2006 2:34:00 AM , Blogger Kodees said...

யார்ராது ரிலையன்சில் வேலை செய்வது? அவருக்கு என் அனுதாபங்கள்.

 
At Friday, September 22, 2006 2:35:00 AM , Anonymous Anonymous said...

1. கருப்பு சட்டை அணிவது ஏன்?
ஒரு அடையாளம் வேண்டாமா - அதுக்குத்தான் !
2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?
சிலையிருப்பதைக் காட்ட வேண்டாமா - வேறு எதைப்போடுவது?
3. பெரியாரை கடவுள் ரேஞ்ஜிற்கு உயர்த்துவது ஏன்? (அவருடைய கருத்துக்கள் சிறந்தவை என்றாலும், கருத்துக்களை விட்டு நபரை துதிப்பது ஏன்? - பெரியாரே அதை விரும்பவில்லை என்றாலும் கூட!)
யாரை வணங்கவேண்டுமென்று அவர் சொல்லாமல் போய்விட்டார். அதனால்தான் வரையே வணங்குகிறோம்
Any more questions?

 
At Friday, September 22, 2006 2:44:00 AM , Anonymous Anonymous said...

கேள்விகள் கேட்கப்பட்டது பதில் எதிர்பார்த்தல்ல, உங்கள் திரிக்கப்பட்ட interpretation சொல்லத்தான் என்றால் இந்த பின்னூட்டத்தை விட்டு விடுங்கள். இல்லையென்றால், சில விளக்கங்கள்:

1.இக்கேள்விக்கு "மாசிலா" அவர்கள் அளித்த பதில் சரியானது.
கருப்பு என்றால் துரதிர்ஷ்டமானது என்று
பயந்து ஒதுக்கிய பாமரனுக்கு ஒரு "counter example" ஆக, "பார் நான் கருப்பு சட்டை போட்டும் ஒன்றும் ஆகவில்லை" என்று காட்டுவதற்காக.

//2. சிலைக்கு மாலை போடுவது ஏன்?//

மாலை என்பது கடவுளுக்கு மட்டும் என்று யார் சொன்னது?
நீங்கள் மாலை அணிவித்து யாருக்கு வேண்டுமானாலும் மரியாதை செய்யலாம். கல்யாணமோ, மேடைகளோ பார்த்ததில்லையா? நம்பமுடியவில்லை.
இது தமிழர் என்றில்லை, எல்லா இந்திய பண்பாடுகளில் இது உண்டு.

3. ஒரு இனத்திற்கு ஒருவர் நல்லது
செய்தால் அந்த இனம் அந்த தனி நபரை கொண்டாடுவதில் தவறில்லை.
(எந்த அளவிற்கு என்பது கேள்விக்குட்பட்டது).

அவர்களை நோக்கி கேட்கப்படாத கேள்விக்காக Hariharan, Jayaraman ஓடி வந்து தங்கள் தகுதிக்கேற்ப விஷம் கக்கியுள்ளார்கள்.

 
At Friday, September 22, 2006 2:48:00 AM , Blogger வஜ்ரா said...

ஒரே கருத்தை வலியுருத்தும் எந்த கொள்கையும் நாளடைவில் intolerant ஆக மாறிவிடுவது தொன்றுதொட்டு நடந்து வருகின்றது...

கிருத்துவம், இஸ்லாம், கம்யூனிசம், எல்லாவற்றிலும், நம்புபவர்கள், நம்பாதவர்கள் என்று உலகை இரண்டாகப் பிரிப்பர். அதே தான் இப்போது பெரியாரிசத்திலும் நடந்து வருகின்றது. பெரியார் கருத்தை ஏற்பவர்கள், ஏற்காதவர்கள் என்று ஒரு சில அடிப்படைவாதிகள் உலகை இரண்டாகப் பிரித்துவிட்டனர். அதனால் பெரியாரின் கொள்கைகளும் மாற்றத்தை ஏற்காத மதக் கோட்பாடாக மாறிவிட்டது, துரதிர்ஷ்டவசமாக!!

 
At Friday, September 22, 2006 2:53:00 AM , Blogger Kodees said...

//கருப்பு என்றால் துரதிர்ஷ்டமானது என்று
பயந்து ஒதுக்கிய பாமரனுக்கு ஒரு "counter example" ஆக, "பார் நான் கருப்பு சட்டை போட்டும் ஒன்றும் ஆகவில்லை" என்று காட்டுவதற்காக.//

OK, ஆனால் அதையே அடையாளம் ஆக்கியது ஏன்


///மாலை என்பது கடவுளுக்கு மட்டும் என்று யார் சொன்னது?
நீங்கள் மாலை அணிவித்து யாருக்கு வேண்டுமானாலும் மரியாதை செய்யலாம். கல்யாணமோ, மேடைகளோ பார்த்ததில்லையா? நம்பமுடியவில்லை.
இது தமிழர் என்றில்லை, எல்லா இந்திய பண்பாடுகளில் இது உண்டு. //

அதுதான் கேள்வியே, சிலைக்கு என்ன மரியாதை? தமிழர்/இந்திய பண்பாடுகளில் உள்ள அனத்தும் தங்களுக்கு ஏற்புடையதா?


///ஒரு இனத்திற்கு ஒருவர் நல்லது
செய்தால் அந்த இனம் அந்த தனி நபரை கொண்டாடுவதில் தவறில்லை.
(எந்த அளவிற்கு என்பது கேள்விக்குட்பட்டது). //
எந்த அளவிற்கு என்பது கேள்விக்குட்பட்டது அதைத்தான் நான் கேட்கிறேன்.


//அவர்களை நோக்கி கேட்கப்படாத கேள்விக்காக Hariharan, Jayaraman ஓடி வந்து தங்கள் தகுதிக்கேற்ப விஷம் கக்கியுள்ளார்கள். //

கருத்து சுதந்திரத்தை மதிப்போம். பெரியாரே சொல்லியிருக்கிறாரே.

 
At Friday, September 22, 2006 2:59:00 AM , Blogger Krishna (#24094743) said...

1.பன்றிகளின் வேதத்தில் கறுப்பு அறியாமையைக் குறிக்கும், வெளிச்சம் அறிவைக் குறிக்கும். தன்னைச் சேர்ந்தவர்கள் கறுப்பு எனும் அறியாமை நிறத்திலேயே வாழ்ந்தால் தான் தன் வீட்டு சோறு வேகும் என்பதால், பெரியார் அந்த சட்டை போட வைத்தார். (இப்போ மஞ்சக் கலருக்கு மாறிட்டோமுல்ல?)
2. தற்போதைய முதல்வரின் எண்ணப்படி, தமிழர்களாகிய நாங்கள் மிருக ஜாதியினர். காக்கை, குருவி எங்கள் ஜாதி. தனியொரு காக்கைக்கு கக்கூஸ் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பது புது மொழி. எனவே நாங்கள் சிலையாகிய கக்கூஸ் வீதிக்கு வீதி வைப்போம்.
இதில் ஒரு side benefit-ம் இருக்கு. இன்னும் 200 வருடங்களில், பார்பனரின் சதியால், வருடாவருடம் இந்த சிலைகளை கழுவியே வாழவைக்கப்பட்ட மக்களுக்கு 120% இட ஒதுக்கீடு கேட்டு போராடுவோம். தொலைநோக்கு சிந்தனை வேண்டாமா?
3. நாட்டில் எல்லாரும் சாமிக்கே மாலை போட்டா? - பூ விற்கும் ஏழை மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுவது யார்? அதனாலே நானே கடவுள் - வேறு யாரும் இல்லைன்னு சொல்லி எங்களுக்கே மாலை போட்டுக்குவோம். செத்தா எங்கள் சமாதிக்கும், சிலைக்கும் மாலை போட்டுக்குவோம். பகுத்தறிவுப்படி, எங்க சிலைக்கும் மாலை போட்டா ஓட்டு கிடைக்கும். சாமி சிலைக்கும் மாலை போட்டா கொஞ்சம் காதுல பூவும், கை நிறைய சுண்டலும் கிடைக்கும். அத வச்சிட்டு என்ன பண்ணுறது?

 
At Friday, September 22, 2006 3:41:00 AM , Anonymous Anonymous said...

அப்பா
திராவிட கலாசாரம் என்னவென்று இப்பொழுது புரிகிறதா?

தமிழர்கள் செய்தால் அது மூட நம்பிக்கை.

இவர்கள் செய்தால் அது தமிழர் வழக்கம்.

இதெல்லாம் தாடிக்காரருக்கு மால போட்டு கும்பிட்டா புரியும்.

 
At Friday, September 22, 2006 4:39:00 AM , Anonymous Anonymous said...

அசுரகுரு, ராஜகுரு - இரண்டு கிரகங்கள்
அவைகள் - சுக்கிரன், குரு
சுக்கிரனுக்கு வெள்ளை நிறம், குருவிற்கு மஞ்சள் நிறம்
இரண்டுமே நலதைச் செயக்கூடிய கிரகங்கள்

அதனால்தான் 1948ல் இருந்து வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு வந்தவர் இப்பொழுது அதிகப்படியான பலன் வேண்டி மஞ்சள் துண்டையும் அணிந்து வருகிறார்

அவர் எப்போழுதாவது கருப்புச் சட்டை அணிந்ததுண்டா?

அணிந்தவன் எல்லாம் காணாமல் போய்விடுவான் - ஏனென்றால் கருப்பிற்கு அதிபதி சனி (Saturn)

அவருக்குத் தெரிந்தது - முன்பு அவர் இருந்த கட்சிக்காரர்களுக்குத் தெரியவில்லை

அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்!

இப்போது புரிகிறதா?

 
At Friday, September 22, 2006 4:50:00 AM , Anonymous Anonymous said...

1) OK, ஆனால் அதையே அடையாளம் ஆக்கியது ஏன?

ஏன் ஒரு தனி அடயாளம் இருந்தால் என்ன தப்பு? ஒவ்வொரு கட்சிக்கும் கொடி/சின்னம் இருப்பது போல் தான் இதுவும்.


2) //அதுதான் கேள்வியே, சிலைக்கு என்ன மரியாதை? தமிழர்/இந்திய பண்பாடுகளில் உள்ள அனத்தும் தங்களுக்கு ஏற்புடையதா? ///

இது என்ன வாதம்?
ஒரு பண்பாட்டை பின்பற்றினால், அதை 100% பின்பற்ற வேண்டுமா?
இல்லை reject செய்தால் 100% reject செய்யனுமா? அப்படியானால், கடல் தாண்டிய யாரும் பிராமினர் கிடயாது.
எந்தப் பண்பாடுகள் ஏற்ற-தாழ்வுகளை காட்டவில்லையோ அதை செய்வது என்ன தவறு? மாலை போடுவது ஒன்றும் பாவமில்லை. சாதி போன்ற ஏற்ற-தாழ்வுகளை காட்டுவதுதான் பாவம்.

3) //எந்த அளவிற்கு என்பது கேள்விக்குட்பட்டது. //
பெரியாரை கடவுளாக பார்ப்பது எனக்கும் அருவருப்பை தருகிறது.
அவரை ஒரு நல்ல எண்ணமுடைய மனிதராகத்தான் பார்க்க வேண்டும்.

4) //கருத்து சுதந்திரத்தை மதிப்போம். பெரியாரே சொல்லியிருக்கிறாரே.//

கருத்து சொல்ல வேண்டாமென்று யாரும் சொல்லவில்லை. சொல்லும் கருத்தால், சொன்னவரின் Quality தெரிய வரும் :-) .
--- MKK

 
At Friday, September 22, 2006 4:55:00 AM , Anonymous Anonymous said...

//1.பன்றிகளின் வேதத்தில் கறுப்பு //

என்ன Krishna, பெரியாரின் கருத்துக்கள் உங்களின் சொகுசு வாழ்வுரிமையை பாதித்ததால் வருத்தமா?

-- MKK

 
At Friday, September 22, 2006 5:08:00 AM , Blogger Kodees said...

///இது என்ன வாதம்?
ஒரு பண்பாட்டை பின்பற்றினால், அதை 100% பின்பற்ற வேண்டுமா?
இல்லை reject செய்தால் 100% reject செய்யனுமா? அப்படியானால், கடல் தாண்டிய யாரும் பிராமினர் கிடயாது.
எந்தப் பண்பாடுகள் ஏற்ற-தாழ்வுகளை காட்டவில்லையோ அதை செய்வது என்ன தவறு? மாலை போடுவது ஒன்றும் பாவமில்லை. சாதி போன்ற ஏற்ற-தாழ்வுகளை காட்டுவதுதான் பாவம்.///

நீங்கள்தான் மாலை போடுவது தமிழர் பண்பாடு என்றீர்கள், அது என்ன தமிழர் பண்பாடு என்ற வாதம்.
அதற்குப்பதில் மாலை போடுவது ஒன்றும் பாவமில்லை. சாதி போன்ற ஏற்ற-தாழ்வுகளை காட்டுவதுதான் பாவம். என்ற கருத்து சரிதான்.
ஆனாலும் ஒரு கேள்வி எற்றத்தாழ்வுகளைக் காட்டாத எல்லாப் பழக்கமும் தங்களுக்கு ஏற்புடையதா? உதாரணத்திற்கு. பூனூல் உயர்வு தாழ்வைக் காட்டுகிறது சரி, திருநீறு பூசுவது உயர்வு தாழ்வைக் காட்டுகிறதா? இல்லையே அப்பொ அதும் சரியா?
திருநீறு பூசுவது மூட நம்பிக்கை என்றால் மாலை போடுவது மட்டும் என்னவாம்?

 
At Friday, September 22, 2006 5:28:00 AM , Anonymous Anonymous said...

//நீங்கள்தான் மாலை போடுவது தமிழர் பண்பாடு என்றீர்கள், அது என்ன தமிழர் பண்பாடு என்ற வாதம்.//

தமிழர் பண்பாடு என்ற வாதம், உயர்ந்தவர்களை மதிப்பளிக்கும் முறை, அதனால் தவறில்லை என்ற அர்த்ததில் "மாசிலா" அவர்கள் கூறியுள்ளார்.
(If you read carefully, you can find that this respons was given by Mr.Masila. What I say is my interpretation of his comment. But still I dont find anything wrong in his argument.)


2) //திருநீறு பூசுவது உயர்வு தாழ்வைக் காட்டுகிறதா? இல்லையே அப்பொ அதும் சரியா?
திருநீறு பூசுவது மூட நம்பிக்கை என்றால் மாலை போடுவது மட்டும் என்னவாம்? //

உங்களுடய புரிதலில் தவறு உள்ளது.
ஒரு கலாச்சாரத்தில், மதம் சார்ந்த பழக்கங்களும் (திருநீறு பூசுவது,வர்ணாசிரம்) இருக்கும், மதம் சாராத ஆனால் மொழி/இடம் சார்ந்த பழக்கங்களும்(நாம் மதிப்பவர்க்கு மாலை போடுதல், பொங்கல், சித்திரையில் புது வருட கொண்டாட்டம் போன்றவை)
*இரண்டிற்கும் சம்பந்தமில்லை.*
மதத்தை/கடவுளை/வர்ணாசிரமத்தை மறுப்பதால் ஒருவன் புது வருடம் கொண்டாடக் கூடாதா என்ன?
--MKK

 
At Friday, September 22, 2006 5:45:00 AM , Blogger Kodees said...

//உயர்ந்தவர்களை மதிப்பளிக்கும் முறை, அதனால் தவறில்லை //

உயர்ந்தவர்களை மதியுங்கள் - உயிரோடிருந்தால் அதனால் தவறில்லை ஆனால் மாலை போடப்படும் சிலை ஆஹா, இவர் நம்மை மதிக்கிறார் என்று மகிழுமா? முட்டாள்தனமில்லையா?


/// உங்களுடய புரிதலில் தவறு உள்ளது.
ஒரு கலாச்சாரத்தில், மதம் சார்ந்த பழக்கங்களும் (திருநீறு பூசுவது,வர்ணாசிரம்) இருக்கும், மதம் சாராத ஆனால் மொழி/இடம் சார்ந்த பழக்கங்களும்(நாம் மதிப்பவர்க்கு மாலை போடுதல், பொங்கல், சித்திரையில் புது வருட கொண்டாட்டம் போன்றவை)
*இரண்டிற்கும் சம்பந்தமில்லை.*
மதத்தை/கடவுளை/வர்ணாசிரமத்தை மறுப்பதால் ஒருவன் புது வருடம் கொண்டாடக் கூடாதா என்ன? ///

ஐயா, என் அடிப்படை கேள்வியிலிருந்து விலகி எங்கோ வந்துவிட்டோம், simple மாலை போடுதல் ஒருவித (பலவித சப்பக்கட்டுக்கள் போட்டாலும் கூட) மூட நம்பிக்கையா இல்லையா?

 
At Friday, September 22, 2006 6:06:00 AM , Anonymous Anonymous said...

//மாலை போடுதல் ஒருவித (பலவித சப்பக்கட்டுக்கள் போட்டாலும் கூட) மூட நம்பிக்கையா இல்லையா? //

மூட நம்பிக்கை இல்லை; காரணம் இங்கு வழிபாடு என்னும் மூட நம்பிக்கை நிகழவில்லை. மரியதை என்னும் நிகழ்வு நடக்கிறது.

//(பலவித சப்பக்கட்டுக்கள் போட்டாலும் கூட)//
உங்களுக்கு என்னுடைய முந்தைய பதிலின் எந்தப் பகுதி புரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. மத வழக்கங்களும், Social Culture um வேறு வேறு என்பது புரிந்து கொள்ள முடியவில்லையா? இல்லை புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா என்றும் எனக்குத் தெரியவில்லை.
மதத்தை மீறியும் கலாச்சாரம் இருக்கலாம் அல்லவா?
(Recently there was an article in Thamizmanam about Malayalees celebrating Onam without any Religious distinction, like that garlanding is an social practice IRRESPECTIVE of religion)
-- MKK

 
At Friday, September 22, 2006 6:14:00 AM , Anonymous Anonymous said...

மாலை போடுவதில் ஒன்றும் தப்பில்லை
நம் தந்தையாரின் நினைவு தினத்தன்று (திதியனறு) வீட்டில் அவர் படத்திற்கு மாலை போட்டு வணங்குவதில்லையா - வீட்டில் ஒரு விஷேசம் என்றாலும் மாலை போடுவோம் இல்லையா அதுபோலத்தான் இதுவும்
பெரியாரின் சீடர்கள் அவரைத் தந்தை பெரியார் என்றுதான் அழைக்கிறார்கள்
ஆகவே இதை விடுங்கள்
கருப்புச் சட்டைப்போல இது ஒன்றும் பிரச்சினைக் குரிய விஷயமல்ல!

 
At Friday, September 22, 2006 6:40:00 AM , Anonymous Anonymous said...

//2. பெரியார் சிலை சுயமரியாதை உருவ வழிபாடு //

மாலை போட்டால் கடவுளா?

நம்ம ஊருல பிணத்துக்கு கூடதான் மாலை போடுறோம்,
ஒரு மரியாதைக்காக

 
At Friday, September 22, 2006 8:00:00 AM , Anonymous Anonymous said...

முதலில் சிலை வைப்பதே ஒரு அபத்தம்.. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது

ஊருக்கு ஊர் சில...
இதற்கு பதிலா ஏழை மக்களுக்கு உணவு வழங்கி இருக்கலாம்.

பாலா

 
At Saturday, September 23, 2006 1:17:00 AM , Blogger Kodees said...

//மாலை போட்டால் கடவுளா? //
கடவுள் என்று எங்கே சொன்னேன், மாலை எதற்கு/ மண்னை போடுங்களேன் மாலையில் தான் மரியாதை என்பது மூடநம்பிக்கை இல்லையா?

//மாலை போடுவதில் ஒன்றும் தப்பில்லை//
திருநீறு பூசுவதில் என்ன தப்பு, குங்குமம் வைப்பதில் என்ன தப்பு?

 
At Saturday, September 23, 2006 3:05:00 AM , Anonymous Anonymous said...

யாரோ அவர்களே,

அனானி சொன்னது போல் பிணத்துக்கு துர்நாற்றத்தை போக்க மாலை போடுவார்கள்.

வருடம் பூரா நாறிக்கொண்டிருக்கும் இந்த சிலைக்கும் தமிழர் (தப்பு )திராவிட திருநாள் அன்று மாலை போட்டா நல்லது தானே.

ஆனா சந்தனம் பூசக்கூடாது.

சிலருக்கு சந்தனம் ஒத்துக்கொள்ளாது.

பேசாம வெங்காயப் படையல் வைக்கலாம்.

அதான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.

 
At Saturday, September 23, 2006 4:43:00 AM , Anonymous Anonymous said...

சிலையை மகிழ்விப்பதற்காக மாலை போட்டால் தவறூதான்,

சொந்தக்காரரோ, நெருங்கிய நண்பரோ இறந்துவிட்டால்
குறைந்த பட்சம் அவருடைய போட்டோவோ,
அல்லது ஏதாவது பொருளோ அவர் நினைவாக வைத்திருப்போம்.
அதை பார்க்கும்போது அன்னாருடைய நினைவுகள் வரும்.
அவ்வளவுதான்.

 
At Tuesday, October 17, 2006 4:12:00 AM , Blogger ரவி said...

//
கருப்பு சட்டை அணிவது ஏன்?
//

அவங்களுக்கு என்று ஒரு அடையாளம்..

அது ஒரு பெரிய விஷயம் இல்லையே...

//
சிலைக்கு மாலை
//

சும்மா போட்டுட்டு போறாங்க, விடுங்க.

//
பெரியார் துதி
//

அவங்க தலைவர் அவர்தானே..பாடினால் என்னங்க..

 
At Tuesday, October 17, 2006 6:37:00 AM , Blogger Kodees said...

ரவி, மூடநம்பிக்கையை எல்லா விதத்திலும் எதிர்க்கிறேன், எதற்கும் அடிமையாய் இருக்க மறுக்கிறேன் என்பவர்கள் ஒரு சட்டைக்கும் சிலைக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் என்ன? வேறு கலர் சட்டை போட்டும் அதைச் செய்யலாமே?

என்னைப் பொருத்தவரையில் நான் யாருக்கும்/எதற்கும் அடிமையில்லை, எந்தக் கொள்கையும் விவாததிற்கு உரியதே, எனக்கு ஒரு கொள்கை பிடிக்கும் என்பதற்காக அதில் உள்ள குறைபாடுள்ள மற்றவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.

பகுத்தறிவு என்பது யாரோ யோசித்ததை கேள்வி கேட்காமல் பின்பற்றுவது அல்ல, நானே பகுத்தறிந்து பார்ப்பது என்று நம்புகிறேன். ஒருவர் சொன்னார் என்பதற்காக எதிர்க்காமல்/நம்பாமல் ஆராய்ந்து பார்ப்பதுதான் பகுத்தறிவு என்று நம்புகிறேன். நான் ஆத்திகனோ, நாத்திகனோ அல்லன், எல்லாவற்றையும் நம்பும்/கேள்வி கேட்கும் ஒரு சாதாரன மனிதன்.

ஒரு கருத்தைச் சொன்னால் உடனே அவனுக்குச் சாயம் பூசும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை. தயவு செய்து என்னை மாதிரியும் சிலர் இருப்பார்கள் என்று நம்புங்கள்.

உலகம் உள்ளவரையில் மாற்றுக் கருத்துகள் இருக்கும், அப்படி இருப்பதனால்தான் உலகம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

இத்துடன் இப்பதிவு மூடப்படுகிறது. இனி இதில் இடும் பின்னூட்டங்கள் எதுவும் பதிப்பிக்கப் பெறாது.

இப்பதிவில் பங்கு பெற்ற அனைத்து வலைஞர்களுக்கும் எனது நன்றி.

 

Subscribe to Post Comments [Atom]

<< Home