Thursday, September 21, 2006

ஒரு புதிர்

என்னிடம் 3 சிகப்பு பந்துகளும், 3 நீல பந்துகளும் உள்ளன. ஒரு பெட்டியில் 2 சிகப்பு பந்துகளும், ஒரு பெட்டியில் 2 நீல பந்துகளும்,ஒரு பெட்டியில் 1 சிகப்பு 1 நீல பந்துகளும் என அடைத்து சீல் செய்துவிட்டேன். எனது பிரிண்டரில் சிகப்பு, நீலம், இரண்டும் என 3 பேப்பர் பிரிண்ட் செய்து அந்த பெட்டியில் ஒட்டும் போது அனைத்தையும் தவறாக ஒட்டிவிட்டேன் (அதாவது சிகப்பு என்ற பேப்பர் ஒட்டப்பட்ட பெட்டியில் நிச்சயமாக சிகப்பு இல்லை, நீலம் என்ற பேப்பர் ஒட்டப்பட்ட பெட்டியில் நிச்சயமாக நீலம் இல்லை)

இப்போது கேள்வி

நீங்கள் ஏதாவது ஒரு பெட்டியை திறந்து கண்களை மூடியவாறு அதில் உள்ள 2 பந்தில் எதாவது ஒரு பந்தை மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடிவிட வேண்டும். கையில் உள்ள பந்தின் நிறத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன நிற பந்துகள் உள்ளன என்று கண்டுபிடிக்கவேண்டும்

முயற்சியுங்கள்

அன்புடன்

4 Comments:

At Thursday, September 21, 2006 2:10:00 AM , Blogger கோவி.கண்ணன் [GK] said...

இரண்டும் ந்றமும் உள்ள பெட்டியில் இருந்து ஒரு பந்தை எடுத்தால் போயிற்று !

அது நீலமாக இருந்தால், சிகப்பு கலர் பேப்பர் உள்ள பெட்டியில் நீல நிற பந்து இருக்கும்.

அது சிவப்பாக இருந்தால், நீல கலர் பேப்பர் உள்ள பெட்டியில் சிவப்பு நிற பந்து இருக்கும்.

அறிவாளி இல்லைங்க தவறாக இருந்தால் விட்டு பிடிங்க !

 
At Thursday, September 21, 2006 2:11:00 AM , Blogger Thirumozhian said...

இது மிகவும் எளிதான புதிர்.

முதலில் 'இரண்டும்' என லேபிள் இடப்பட்ட பெட்டியில் இருந்து ஒரு பந்தை எடுக்கவேண்டும். அது என்ன நிறமோ அதற்கு ஏற்ற லேபிளை உறித்து எடுத்து இந்தப் பெட்டியில் ஒட்டி விடவேண்டும். இப்போது மூன்றாவதாக நாம் இதுவரை டச் பண்ணாத பெட்டியின் லேபிளை எடுத்து (அது கண்டிப்பாகத் தவறு என்கிற காரணத்தால்) லேபிள் இல்லாத (அதாவது தற்போது லேபிள் உறித்து எடுக்கப்பட்ட) பெட்டியில் ஒட்டிவிட வேண்டும். நாம் பந்தை எடுத்த பெட்டியின் ஆக்சுவலி தவறான லேபிளை இப்போது லேபிள் இல்லாத பெட்டியில் (அது தாங்க இரண்டாவதாக லேபிள் உறிக்கப்பட்ட பெட்டி) ஒட்டி விடவேண்டும்.

கூட்டி கழிச்சுப் பாருங்க. கணக்கு கரெக்டா வரும்

 
At Thursday, September 21, 2006 2:23:00 AM , Blogger Kodees said...

ஈசியான புதிரோ, 2 விடைகள், 2ம் சரி

 
At Thursday, September 21, 2006 3:13:00 AM , Blogger கலை said...

இரண்டும் என்று எழுதி இருப்பதில் இருந்து ஒரு பந்தை எடுக்க வேண்டும்.

1. அது நீலமாக இருக்கிறதென கொண்டால், அந்தப் பெட்டி தனி நீலப் பந்துகளுக்குரிய பெட்டி. அப்படியானால் சிவப்பு என ஒட்டப்பட்டிருக்கும் பெட்டி, நீலப் பந்துக்குரிய பெட்டியாக இருக்க முடியாது. எனவே அது இரண்டும் கொண்ட பெட்டியாக இருக்க வேண்டும். எனவே அடுத்த பெட்டி (அதாவது நீலம் என ஒட்டப்பட்டிருக்கும் பெட்டி) சிவப்பு பந்துகளுக்குரிய பெட்டியாக இருக்கும்.

2. அந்தப் பந்து சிவப்பாக இருந்தால், அது சிவப்பு பந்துகளுக்குரிய பெட்டியாகவும், நீலம் என எழுதி ஒட்டப்ப்பட்டிருப்பது இரண்டு பந்துகளும் கொண்ட பெட்டியாகவும், சிவப்பு என எழுதப்பட்டிருப்பது நீலப் பந்துகளுக்குரிய பெட்டியாகவும் இருக்கும்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home