Saturday, September 23, 2006

புதிர் எண் - 3

படியூர் நோக்கி நீங்கள் செல்கிறீர்கள். ஓரிடத்தில் 2 பாதைகள் பிரிகிறது. அதில் ஏதோ ஒன்றுதான் படியூர் செல்லும். உங்களுக்கு எந்த வழி படியூர் செல்லும் வழி என்று தெரியாது வழிகாட்டி பலகைகளும் கிடையாது அந்த பிரியும் இடத்தில் 2 நபர்கள் அமர்ந்து உள்ளார்கள். அவர்களை விசாரித்துத்தான் நீங்கள் படியூர் செல்ல முடியும். அவர்களில் ஒருவர் உண்மை மட்டுமே பேசுபவர், மற்றவர் பொய் மட்டுமே பேசுபவர்.( யார் உண்மை பேசுபவர்,யார் பொய் பேசுபவர் என்று தெரியாது) நீங்கள் அவர்கள் இருவரிடமும் ஒரே ஒரு (1 மட்டுமே தலா 1 அல்ல) கேள்விதான் கேட்கவேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை வைத்து நீங்கள் சரியான வழி கண்டுபிடித்து செல்ல வேண்டும். என்ன கேள்வி கேட்பீர்கள்

14 Comments:

At Saturday, September 23, 2006 2:13:00 AM , Blogger கோவி.கண்ணன் [GK] said...

//அவர்கள் இருவரிடமும் ஒரே ஒரு (1 மட்டுமே தலா 1 அல்ல) கேள்விதான் கேட்கவேண்டும். //

உங்களில் யார் உண்மை பேசுவீர்கள் ?என்று கேட்டால் போயிற்று !

 
At Saturday, September 23, 2006 2:16:00 AM , Blogger Kodees said...

உங்களில் யார் உண்மை பேசுவீர்கள் ?என்று கேட்டால் வழி எப்படி கண்டுபிடிப்பீர்கள் 1 கேள்வி கோட்டா முடிந்து போச்சே

 
At Saturday, September 23, 2006 2:19:00 AM , Blogger இலவசக்கொத்தனார் said...

நான் எவ்வழி செல்ல வேண்டும் என கேட்பேன். அவர் சொல்லும் பதிலுக்கு எதிராக உள்ள வழி வழியாகச் செல்வேன். அதுவே சரியான வழி.

விளக்கம் வேண்டுமானால் தனி பின்னூட்டத்தில் தருகிறேன்.

 
At Saturday, September 23, 2006 2:20:00 AM , Blogger ராசுக்குட்டி said...

"நான் அவர்ட்ட படியூர் போக வழி கேட்டா அவர் எனக்கு எந்த வழியைக் காண்பிப்பார்" என்று ஒருவரிடம் கேட்க வேண்டும். அவர் சொல்லும் வழிக்கு எதிர்த்திசையில் பயணித்தால் படியூர் வரும்!

கரெக்டா? சிந்திக்க நல்லா இருந்தது புதிர், தொடரட்டும் உங்கள் புதிர் விளையாட்டுக்கள்!

 
At Saturday, September 23, 2006 2:24:00 AM , Blogger Kodees said...

//இலவசக்கொத்தனார் said...
நான் எவ்வழி செல்ல வேண்டும் என கேட்பேன். அவர் சொல்லும் பதிலுக்கு எதிராக உள்ள வழி வழியாகச் செல்வேன். அதுவே சரியான வழி. //

எப்படி?, உண்மை பேசுபவர் சரியான வழி காட்டுவார், பொய் பேசுபவர் தவறான வழி காட்டுவார்.

 
At Saturday, September 23, 2006 2:24:00 AM , Blogger Kodees said...

ராசுக்குட்டி You are RIGHT

 
At Saturday, September 23, 2006 2:28:00 AM , Blogger உங்கள் நண்பன்(சரா) said...

படியூர் செல்லும் வழி எது என்று பொய் பேசுபவரிடம் கேட்பேன், அவர் கூறும் வழிக்கு எதிர் திசையில் செல்வேன்,

அல்லது

படியூர் செல்லும் வழி எது என்று உண்மை பேசுபவரிடம் கேட்பேன், அவர் கூறும் வழியில் செல்வேன்,


அன்புடன்...
சரவணன்.

 
At Saturday, September 23, 2006 2:32:00 AM , Blogger இலவசக்கொத்தனார் said...

மன்னிக்கவும். நான் எவ்வழி செல்ல வேண்டும் எனக் கேட்டால் அவர் என்ன சொல்வார் என இருக்க வேண்டும். தூக்கக் கலக்கத்தில் பாதி கேள்வி கீ போர்டிலே சிக்கிவிட்டது.

இப்பொழுது சரிதானே?

 
At Saturday, September 23, 2006 2:33:00 AM , Blogger Kodees said...

யார் உண்மை பேசுபவர்,யார் பொய் பேசுபவர் என்று தெரியாது

 
At Saturday, September 23, 2006 2:35:00 AM , Blogger Kodees said...

இலவசக்கொத்தனார் Now You RIGHT

 
At Saturday, September 23, 2006 2:42:00 AM , Anonymous Anonymous said...

Ask a question
where this two paths leads to?
The Liar will say path1 leads to city1 and path2 leads to city2. He will never this leads to Padiyur(It is an assumption)

But the other person will say Path1 leads to Padiyur and other leads to city2.

- Anand

 
At Saturday, September 23, 2006 2:48:00 AM , Blogger Kodees said...

Anand
No assumptions, that may be wrong

 
At Saturday, September 23, 2006 3:01:00 AM , Blogger Simulation said...

நான் படியூருக்கு எந்த வழி செல்ல வேண்டும் என்று உனது நண்பனிடம் கேட்டால் அவன் எனக்கு எந்த வழி காட்டுவான் என்று யாராவது ஒருவனிடம் கேட்க வேண்டும். அவன் காட்டும் வழிக்கு எதிர்த் திசையில் செல்ல வேண்டும்.

விளக்கம் யாரோ தருவீர்கள் என நம்புகின்றேன்

- சிமுலேஷன்

 
At Saturday, September 23, 2006 3:07:00 AM , Blogger Kodees said...

Simulation - You are RIGHT
விளக்கம் எதற்கு, நீங்களே சரியாகத்தான் சொல்லியுள்ளீர்களே

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home