Friday, September 22, 2006

அடுத்த புதிர்

என்னிடம் 10 சாக்குப்பைகளில் தலா 10 இரும்புக்குண்டுகள் உள்ளன. ஒவ்வொரு குண்டும் 1 கிலோ எடை கொண்டது. அதில் ஒரு சாக்குப்பையில் மட்டும் ஒவ்வொரு குண்டும் 1.1 கிலோ எடை கொண்டது (மற்ற 9 பையிலும் 1 கிலோ குண்டுகள் தான்).

உங்களிடம் ஒரு ஸ்கேல் உள்ளது. ஒரு காலி சாக்குப்பையும் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு பையிலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் குண்டுகளை எடுத்து காலி பையில் போட்டுக்கொள்ளலாம், ஆனால் ஒரே ஒரு முறைதன் எடை போடவேண்டும். அப்படி போட்ட எடையை வைத்து எந்த பையில் அந்த எடை அதிகமான (1.1 கிலோ) குண்டுகள் உள்ளன என்று கண்டு பிடிக்கவேண்டும்.

7 Comments:

At Friday, September 22, 2006 2:29:00 AM , Blogger வலைஞன் said...

1+2+3+4+5+6+7+8+9

புள்ளி அளவு .1 ஆக இருந்தால் முதலாவது!
புள்ளி அளவு .2 ஆக இருந்தால் இரண்டாவது!
புள்ளி அளவு .3 ஆக இருந்தால் மூன்றாவது!
புள்ளி அளவு .4 ஆக இருந்தால் நான்காவது!
புள்ளி அளவு .5 ஆக இருந்தால் ஐந்தாவது!
புள்ளி அளவு .6 ஆக இருந்தால் ஆறாவது!
புள்ளி அளவு .7 ஆக இருந்தால் ஏழாவது!
புள்ளி அளவு .8 ஆக இருந்தால் எட்டாவது!
புள்ளி அளவு .9 ஆக இருந்தால் ஒன்பதாவது!
புள்ளி அளவு .0 ஆக இருந்தால் மீதமுள்ளது!

 
At Friday, September 22, 2006 2:31:00 AM , Blogger Kodees said...

வலைஞன்- சரியான பதில்

 
At Friday, September 22, 2006 3:29:00 AM , Blogger ராசுக்குட்டி said...

1,2,3,என பைகளுக்கு எண்ணிட்டுக் கொள்ளுங்கள், அதே எண்ணிக்கையில் பந்துகளை எடுத்து காலி சாக்குப்பையில் போட்டுக் கொள்ளுங்கள் மொத்தம் 55 கிலோக்கள் இருக்க வேண்டும் எவ்வளவு அதிகமோ 55.2 என்றால் 2-வது சாக்கு...55.5 என்றால் 5-ஆவது சாக்கு

கரெக்டா?!

 
At Friday, September 22, 2006 3:32:00 AM , Blogger dondu(#11168674346665545885) said...

முதல் பையிலிருந்து ஒரு குண்டு, இரண்டாம் பையிலிருந்து இரண்டு குண்டுகள் ..... பத்தாவது பையிலிருந்து பத்து குண்டுகள் எடுத்து ஒன்றாக எடை போடவும். முதல் பயில் அதிக எடையுள்ள குண்டு இருந்தால் காண்பிக்கும் எடை 0.1 அதிகரிக்கும், இரண்டாவது --> 0.2, இப்படியே பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Friday, September 22, 2006 3:46:00 AM , Blogger Kodees said...

ராசுக்குட்டி & dondu(#4800161) சரியான பதில்கள்

 
At Friday, September 22, 2006 3:54:00 AM , Blogger Anu said...

take one ball from the first bag
two from the second and so on.
And based on the weight we can find out which bag it is from for eg if weight is around x.3 then its from 3rd bag

 
At Friday, September 22, 2006 3:59:00 AM , Blogger Kodees said...

Anitha Pavankumar - you are right

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home