புதிர் எண்-7
நீங்கள் ஒரு காரில் ஒரே வேகத்தில் செல்கிறீர்கள். ஒரு இடத்தில் உள்ள மைல் கல்லில் ஒரு இரண்டெழுத்து எண் (Two digit number) அதில் உள்ளது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து மற்றொறு மைல்கல் பார்க்கிறீர்கள் அதில் ஒருமணிக்கு முன்னால் பார்த்த கல்லில் இருந்த எண்கள் மாறி (34 -43, 56-65 போல்) உள்ளது. மீண்டும் ஒரு மணிநேரப்பயணம் இப்பொழுது உள்ள கல்லில் முதல் கல்லில் உள்ள எண்கள் நடுவில் இப்போது பூஜ்யம் சேர்ந்து உள்ளது.அப்படியானால் நீங்கள் சென்ற காரின் வேகம் என்ன? விளக்கம் தந்தால் நல்லது.
13 Comments:
16 --> 61 --> 106
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், புல்ஸ் ஐ
1)முதல் மைல் கல்லில் இருக்கும் எண்=16
2)ஒரு மணிக்கு பிறகு இருக்கும் மைல்கல்லில் இருக்கும் எண்=61
3)மூன்றவதாக இருக்கும் மைல் கல்லில் இருக்கும் எண்= 106
ஒரே சீரான வேகம் என்பதால் மணிக்கு 45 மைல் வேகத்தில் கார் பயணிக்கிறது. மேலும் மூன்றாவது எண் முதல் எண்ணின் இடையில் பூஜ்யம் சேர்ந்து வருவது, 10-19க்குள் எனில் தான் அப்படி வரும் போது பெரிய எண்ணாக வித்தியாசம் இல்லாமல் வரும்.
வவ்வால், அசத்தீட்டிங்க, கடினம்னு நெனச்சேன், ம் பார்க்கலாம் இன்னுமெத்தனை சரியான விடைகள் வருதுனு.
முதல் கல் 16
இரண்டாவது 61
மூன்றாவது 106
வேகம் 45
விஜய், நீங்களும் சரிதான், இன்னிக்கு நாள் சரியில்லை போல, இது வரைக்கும் ஒரு தவறான விடை கூட வரவில்லை(!!?)
16, 61, 106 - 45 kmph
//இன்னிக்கு நாள் சரியில்லை போல, இது வரைக்கும் ஒரு தவறான விடை கூட வரவில்லை(!!?)//
உங்க நாள் எல்லாம் சரியாத்தான் இருக்கு, நீங்க படிக்கிற புதிர் புத்தகம் தான் ரொம்ப பழசு, நான் எல்லாம் இது போன்ற புதிர்களை ஆரம்ப பள்ளிக்கூடப்பருவத்திலே பார்த்து விட்டேன்!
எதாவது புது புதிர் புத்தகமா வாங்கிட்டு வாங்க! :-))
நானும் கண்டுபிடிச்சுட்டேன்....
45 மைல் வேகம்...
முதல் கல்லில் இருந்த எண் :16
2ம் கல்லில் 16 + 45 :61
3ம் கல்லில் 61 + 45 :106
45 kms speed.
16 +
45
-----
61 +
45
-----
106
----
10x+y+z=10y+x
10y+x+z=100x+y
---------------
9x-9y=9y-99x
108x=18y
y=6x
x=1
y=6
First Milestone = 10x+y=16
Second Milestone = 10y+x = 61
Third Milestone = 100x+y= 106
Speed = 45
முதல் மைல்கல்லில் உள்ள இரண்டெழுத்து எண்ணில் முதலாவதை x என்றும் இரண்டாவதை y என்றும் வைத்துக்கொள்வோம். அதன் மதிப்பு 10x + y.
எனவே இரண்டாவது மைல்கல்லில் உள்ள எண்ணின் மதிப்பு 10y + x.
மூன்றாவது மைல்கல்லில் இருக்கக்கூடிய எண்ணின் மதிப்பு 100x + y.
கணக்கின்படி கார் சீரான வேகத்தில் செல்வதால், முதல் இரண்டு மைல் கல்களுக்கிடையில் உள்ள தூரம் = இரண்டாவது மற்றும் மூன்றாம் மைல் கல்களுக்கிடையில் உள்ள தூரம்
அதாவது
(100x + y ) - ( 10y + x ) = ( 10y + x ) - ( 10x + y )
99x - 9y = 9y - 9x
99x + 9x = 9y + 9y
108x = 18y
6x = y
x மற்றும் y எண்களின் மதிப்பு 0 முதல் 9 வரைதான்.
எனவே
x = 1
y = 6
மைல் கல்களில் இருக்கக்கூடிய எண்கள் 16, 61, 106.
ஆதலால் காரின் வேகம் 45 மைல்.
எளிதுதான்.உங்களது கார் இரண்டு மணி நேரமும் சீரான வேகத்தில் செல்லுமானால், இரு இலக்கங்களையும் முறையே x,y எனக் கொண்டால்,
முதல் எண் = x*10+y
இரண்டாம் எண் = y*10+x
மூன்றாவது எண் = x*100+y
இரண்டாவது எண், முதலாவதற்கும், இரண்டாவதற்கும் மத்தி எண். அப்படியென்றால்,
100x+y-(10x+y)=2(10y+x-(10x+y))
90x=2(9y-9x)
90x=18y-18x
18y=108x
y=108x/18=6x
y=6x
x என்பது 1ஆகத்தான் இருக்கமுடியும்.
அதனால் y = 6
முதல் எண் = 16
இரண்டாம் எண் = 61
மூன்றாவது எண் = 106
காரின் வேகம் = 45 மைல்(மைலெல்லாம் இப்பொழுது இல்லை. 'கிமீ'தான்;-)))
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home