பயணம் - 1
நண்பர்களே எங்கள் பயணம் பக்திப் பயணமல்ல, ஒரு சுற்றுலாதான் என்றாலும் நாங்கள் சென்ற இடங்கள் இதை ஒரு பக்திப் பயணமாக மாற்றியது. அது ஒரு பக்திப் பயணமோ அல்லது சுற்றுலாவோ ஆனால் அது ஒரு அற்புதமான பயணம் என்பதில் எங்கள் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.அதற்கு முன் எங்கள் குழுவைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம் -
1. நாங்கள் யாரும் (8 பேர்) அதற்கு முன் கேதார்நாத் - பத்ரிநாத் போனதில்லை
2. இந்தி யாருக்கும் தெரியாது (இந்தி அரக்கி ஒழிக!)
3. ஆங்கிலம் அரைகுறை (தெரிந்திருந்தும் பிரயோஜனமில்லை - அங்கே முக்கால்வாசிப் பேருக்கு ஆங்கிலம் - one two three கூட தெரியவில்லை - எங்கள் டிரைவருக்குக் கூட!)
4. தன்னம்பிக்கை மட்டும் நிறைய
5. ஆத்திகர்களும், நாத்திகர்களும், அரை - ஆத்திக-நாத்திகர்களும் அடங்கிய குழு
6. ஒரே ஊரைச்சேர்ந்த - ஒன்றாக சிறுவயதிலிருந்து விளையாடிய நண்பர்கள் என்பதால் எங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை (பயணம் சுகமாக - சுபமாக இருக்க இதுதான் முக்கிய காரணம்)
தமிழ்நாட்டிலிருந்து ட்ரெய்னில் டில்லி - அங்கிருந்து காரில் 10 நாள் பயணம் (26,000 ரூபாய் - காருக்கு மட்டும்) எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரம் முன்னமே செய்து கொண்டோம்.
எங்கள் பயணம் உண்மையில் டெல்லியில் தொடங்கியதென்றாலும் - உண்மையான கேதார்நாத் - பத்ரிநாத் பயணம் ஹரித்வாரில்தான் ஆரம்பம்.
ஹரித்வார்
இந்துக்களின் முக்கியமான புனித இடங்களில் ஒன்று. இங்கு பார்க்க வேண்டியவை - மானசாதேவி கோவில், சண்டிதேவி கோவில் (இரண்டும் மலை மேல் உள்ளன - கேபிள்கார் வசதி உண்டு) மற்றும் மஹா ஆரத்தி.மஹா ஆரத்தி சமயத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றதால் நாங்கள் அதைத் தவிர்த்துவிட்டோம்.
டெல்லியிலிருந்து இரவே புறப்பட்டு (ஒரு நாள் தங்கும் காசு மிச்சம் பிடிக்கத்தான்) 200 கி.மி கடந்து காலையில் ஹரித்வார் வந்ததில் இருந்த களைப்பு - கங்கையில் குளித்ததில் பறந்துவிட்டது (நீரில் கால் வைக்க முடியவில்லை - அவ்வளவு விறுவிறுப்பு) இரண்டு நிமிடம் நீரில் இருந்ததில் கை-கால்கள் விரைத்துப் போயின. மேலே வந்து சற்று சூடுபடுத்திக்கொண்டு மீண்டும் குதியல்.
"சரி போதும் வாங்கப்பா கோவிலுக்குப் போகலாம் "என்று குரல் கொடுத்து எல்லோரையும் இழுத்துக் கொண்டு முதலில் மானசாதேவி கோவில் மலை ஏறினோம். பாதை தெரியாமல் விசாரித்துக்கொண்டு ( மந்திர்,மந்திர் - அவ்வளவுதான்) பத்து நிமிடம் அலைந்து சரியான வழி கண்டுபிடித்தது தனி கதை.
இனி மலைமேல்-
3 Comments:
அருமையா இருக்கு பதிவும், படங்களும், பயணமும்.
அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன்.
நானே ஒரு பயணப் பைத்தியம்:-)))
நன்றி, பயணம் என்பதே ஒரு மகிழ்ச்சிதானே
//நானே ஒரு பயணப் பைத்தியம்:-)))///
நானும்தான்
we r waiting for ur next post... Keep going frnd...
Satheesh...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home