Monday, November 03, 2008

ஆனந்த் - ஒரு முன் மாதிரி வீரர்

சில மாதங்களுக்கு முன் விகடனில் (அஞ்) ஞானி - ஆனந்த்திற்கு தமிழக அரசு ஒரு வீடு (உலக சாம்பியன் பட்டம் வென்றதற்காக) பரிசளித்ததற்கு ( முதலில் அவருக்கு அரசாங்கம் அளித்த வீட்டையே அவர் உபயோகப்படுத்தாமல் வாடகைக்கு விட்டுள்ளார், இப்போது அவருக்கு எதற்கு வீடு?) என்று குட்டு வைத்ததும், அது பற்றி ஒரு விவாதம் தமிழ்மணத்தில் நடந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அது பற்றிய விவாதத்தில் நானும் கலந்துகொண்டேன், அது பற்றி ஒரு தனிப்பதிவு இடுவதாகவும் சொல்லியிருந்தேன்.

இப்போது ஆனந்த் மீண்டும் சாம்பியன் (இம்முறை மேட்ச்சில்) ஆகியுள்ள இதுதான் சரியான சமயம் எனப்படுகிறது (பரிசுத்தொகை - 4.5 கோடி).

செஸ்ஸில் Knock-Out, Tournament & Match என மூன்று போட்டி முறைகளிலுமே சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர். ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தகர்த்து இப்பட்டம் வென்ற இரண்டாவது வீரர்.நான் பெருமைப்படுவதெல்லாம் அவரது ஆட்டத்திறனைவிட அவரது நடத்தை குறித்த்தான், சுமார் 20 ஆண்டுகால அவரது ஆட்டகாலத்தில் எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காமல் (நினைவிருக்கட்டும் : செஸ் ஒரு மூளை விளையாட்டு- ஈகோ விளையாட்டு - Psychological Temper நிறைந்த விளையாட்டு) விளையாடி வருவதுதான். செஸ் ஆஸ்கார் எனும் புகழ்பெற்ற விருதை 5 முறை வென்றவர் ஆனாலும் இவை எதுவும் தன் தலைக்குள் ஏறாமல் சராசரி மனிதனைப் போல இருப்பதுதான். (இதற்கு நேர் மாறாக - காஸ்பரோவ், தபலோவ் ஆகியவர்களைப் பாருங்கள்)

எனக்கு ஒரு மகன் பிறந்தால் நிச்சயம் அது ஆனந்தைப்போல் இருக்கவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

வாழ்த்துக்கள் - ஆனந்த்

இப்போது முதலில் கூறியுள்ள சர்ச்சை பற்றி

1. ஆனந்த் வெளிநாட்டில் வசிக்கிறார், அவருக்கு எதற்கு பரிசு?

2. முதலில் அவருக்கு அரசாங்கம் அளித்த வீட்டையே அவர் உபயோகப்படுத்தாமல் வாடகைக்கு விட்டுள்ளார், இப்போது அவருக்கு எதற்கு வீடு?

என் பதில்

1. ஆனந்த் ஸ்பெய்னில் வசித்தாலும் அவர் ஒரு இந்தியக்குடிமகன், அவர் இந்தியக்கொடியின் கீழ்தான் விளையாடுகிறார்

2. நாம் நமது நாட்டின் பெருமையைச் சிறப்பித்த ஒரு வீரருக்கு நமது அன்பைத்தெரிவிக்கத்தான் பரிசளிக்கிறோமேயல்லாமல், அதை அவர் எப்படி உபயோகப்படுத்துகிறார் என்பது தேவையில்லாதது. (அது நமது பணம், நான் ஏன் கேட்ககூடாது என்று யாரோ கேட்டார்கள்) அபினவ் பிந்த்ரா காசுக்கே வழியில்லாதவரா? பின் ஏன் அவருக்கு கோடிக்கணக்கில் பரிசளித்தோம்? அந்தக்காசை அவர் என்ன செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? ஷைனி வில்சனுக்கு நாம் அள்ளிக்கொட்டினோமே அந்தக்காசை அவர் என்ன செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? நீங்கள் கொடுத்த வீடு என்பதற்காக அவர் அந்த வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் கொடுக்கும் பணமும், பரிசும் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்களா? பணம் மட்டுமே பெரிது என்று நினக்கும் பத்திரிக்கையாளர்களும், அதற்கு ஜால்ரா அடிக்கும் பொதுமக்களும் இருக்கும் வரை ஒலிம்பிக்கில் ஒற்றைப்பதக்க நாடாகவே இந்தியா இருக்கும். கையில் பேனாவும் பேப்பருமோ அல்லது கொஞ்சம் பேரோ இருந்துவிட்டால் நம் நாட்டில் யாரும் எது பற்றியும் விமர்சிக்கலாம் அதற்கும் ஜால்ரா போட ஒரு கும்பல் உண்டு என்ற நிலை இந்தியாவைப்பிடித்த சாபம் என்றே சொல்வேன்.

அன்புடன்

1 Comments:

At Monday, November 03, 2008 1:48:00 AM , Blogger Kodees said...

பார்வைக்கு

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home