புதிர் எண் - 9
ஒரு ரூமில் ஒரு மின்விளக்கு உள்ளது, ரூமுக்கு வெளியில் 3 சுவிட்சுகள் (அனைத்தும் ஆஃப் செய்யப்பட்ட நிலையில்) உள்ளன. அதில் ஒன்றுதான் உள்ளே உள்ள மின்விளக்கை எரிய வைக்கும். ரூமின் கதவு நன்றாக மூடப்பட்டுள்ளது, உள்ளே விளக்கு எரிகிறதா என்பது வெளியில் தெரியாது. நீங்கள் வெளியில் உள்ள சுவிட்சை எத்தனை முறை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் ஆனால் ஒரே ஒருமுறை கதவைத் திறந்து உள்ளே செல்லலாம் (மீண்டும் வந்து சுவிட்சுகளை இயக்கக்கூடாது)எந்த சுவிட்சு அந்த மின்விளக்கை எரியவைப்பது என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
3 Comments:
அறத பழசு
முதலில் ஒரு சுவிட்சை போட்டு உள்ளே போகாமல் சிறிது நேரம் இருக்க வேண்டும்.
பிறகு அதை அணைத்து விட்டு வேறொரு சுவிட்சை போட வேண்டும்.
இப்போது உள்ளே சென்று பார்த்தால் ஒரு விளக்கு எரியும், அது தற்சமயம் ஆனில் இருக்கும் சுவிட்ச்
பல்புகளை தொட்டு பார்த்தால் முதலில் எரிந்த பல்ப் சூடாக இருக்கும், அது முதலில் போட்ட சுவிட்ச்.
மீதமிருப்பது சொல்ல வேண்டுமா என்ன?
ஒரு சுவிட்சை கொஞ்ச நேரம் போட்டிருந்து, அணைத்து விட்டு இன்னொரு சுவிட்சை போட்டுவிட்டு மேலே செல்ல வேண்டும். எரியும் பல்புக்கானது இப்போது போட்ட சுவிட்ச். மற்ற இரண்டு பல்புகளைத் தொட்டுப் பார்த்து கொஞ்சம் சூடாக இருப்பது முதலில் போட்ட சுவிட்ச். மூன்றாவது, தெரிந்துவிடுமே..
http://www.parisalkaaran.com/2008/11/blog-post_30.html
அடடா!, இந்தப்புதிரைப் போட்டிருக்கவே வேண்டாம் போல!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home