Tuesday, July 28, 2009

புதிதாய் புதிர்கள்

1. பத்து திருடங்க மாங்கா திருடப்போய் நிறைய மாங்காய் திருடிட்டாங்க. திரும்ப வரும்போது இருட்டாய்டுச்சு, ஒரு சத்திரத்துல திருடின மாங்காய்கள கொட்டி வச்சுட்டு, காலைல பிரிச்சுக்கலாமுனு தூங்கிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல ஒரு திருடன் எழுந்து ரொம்ப பசிக்குது, நாமே சரியா பிரிச்சு வச்சுட்டு நம்ம பங்கு மாங்காய சாப்பிடலாம்னு பிரிக்க ஆரம்பித்தான். ஆனா சரியா பிரிக்க ஒரு காய் குறைந்தது. என்ன செய்யலாம்னு பார்த்தான் அப்போ சுவரில் இருந்த ஒரு சந்துக்குள் ஒரு மாங்காய் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்து அதை எடுத்தான். ஆனால் உள்ளே இருந்து ஒரு நாகம் அவன் கையில் கொத்தியது. கையை உதற மாங்காய் மீண்டும் அதே சந்தில் விழுந்தது (அப்படித்தான்!). இவன் செத்துவிட்டான்.

சற்று நேரம் கழித்து இன்னொரு திருடனுக்குப் பசிக்க அவன் எழுந்து பார்த்தான். ஒருவன் செத்துக் கிடப்பதைப் பார்த்து மகிழ்ந்து சரி இனிமேல் ஒன்பது பங்காக்கினால் போதும் என்று பிரிக்க ஆரம்பித்தான். ஆனா சரியா பிரிக்க ஒரு காய் குறைந்தது. என்ன செய்யலாம்னு பார்த்தான் அப்போ சுவரில் இருந்த ஒரு சந்துக்குள் ஒரு மாங்காய் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்து அதை எடுத்தான். ஆனால் உள்ளே இருந்து ஒரு நாகம் அவன் கையில் கொத்தியது. கையை உதற மாங்காய் மீண்டும் அதே சந்தில் விழுந்தது.

இதே போல் விடிய விடிய ஒன்பதுபேரும் செத்துப்போய்விட கடைசித் திருடன் எழுந்து அத்தனை (எத்தனை என்பதுதான் கேள்வி) காய்களையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான். அவர்கள் பறித்த காய் எத்தனை (குறைந்தபட்சம்)?

2. ஒரு ராஜா தனது நன்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். காலையில் விருந்து. இன்னும் 12 மணி நேரம் இருக்கிற போதுதான் தெரிகிறது - தன் நண்பர்களுக்காக வாங்கி வைத்திருக்கும் வெளிநாட்டு மதுபுட்டிகள் 8 -ல் ஒன்றில் விஷம் கலக்கப்பட்டிருப்பது.

அந்த விஷம் வேலை செய்ய சுமார் 10 மணி நேரம் ஆகும் (ஒருதுளி மது போதும் சாகடிப்பதற்கு). எப்படி எந்தப் புட்டியில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது, விருந்தைத் தள்ளி வைப்பதும் கேவலம் என்று யோசிக்கும் போது அவருக்கு நினைவுக்கு வந்தது - மூன்று மரணதண்டனைக் கைதிகள்.

இவர்களை வைத்து இந்த மதுபுட்டிகளை சோதித்து அதை தூக்கி எறிந்து விடுங்கள் இவர்களில் யார் செத்தாலும் பரவாயில்லை, விருந்தினர்களுக்கு ஏது ஆகக்கூடாது என்று தன் மந்திரியைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். மந்திரியும் தன் மூளையைக் கலக்கி சரியாகக் கண்டுபிடித்துவிட்டார்.

நீங்களும் தான் கண்டுபிடியுங்களேன்.

Labels:

12 Comments:

At Wednesday, July 29, 2009 1:43:00 AM , Anonymous Anonymous said...

அய்யா கொஞ்சம் பத்தி பிரிச்சுப் போடுங்க சாமி. படிக்க முடியல

 
At Wednesday, July 29, 2009 1:46:00 AM , Blogger Kodees said...

பிரிச்சாச்சு! பிரிச்சாச்சு!!

 
At Wednesday, July 29, 2009 3:31:00 AM , Blogger ஸ்ரீ said...

ம், ரொம்பக் கஷ்டமாக் கேட்டா எப்பூடி?

 
At Wednesday, July 29, 2009 9:42:00 AM , Blogger ஜாம்பஜார் ஜக்கு said...

வாத்யார் ரஜாக் கதையை மொதல்ல எடுத்துப்பமா? இதல்லாம் கொஞ்சம் கட்டம் போட்டு சொல்லணூம் தலீவா.

மொதல்ல இப்டி பாட்ல கொடுக்கணும்.

கைதி1: -x-x-x-x
கைதி2: --xx--xx
கைதி3: ----xxxx

ஆச்சா?

அப்பாலிக்கா இப்டி ஈஸியா கண்டு புடிக்கலாம் வாத்யார்:

யாருக்கும் ஒண்ணியும் ஆவலைன்னா மொதல் பாட்லு.

கைதி1 காலின்னா ரெண்டாவது பாட்லு.

இப்டியே போட்டுகினே போய்...

மூணு பேரும் காலின்னா 8வது பாட்லுன்னு கதைய முடிச்சுடணும்.

நான் பாட்டுக்கு பதில போட்டுகினேன். படிக்கிற ஆளுக்கு மண்ட காயப் போவுது!!

வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

 
At Wednesday, July 29, 2009 9:03:00 PM , Blogger Kodees said...

ஜக்கு - You r right, ஆனாக்க மாங்கா கதைக்கு விடையும் சொல்பா!

 
At Thursday, July 30, 2009 2:23:00 AM , Anonymous Anonymous said...

ஜக்கு சார், நீங்க கண்டுபிடிச்ச விடையை எனக்கும் சொல்லுங்கள்

தூயவன்.

 
At Thursday, August 20, 2009 3:53:00 AM , Blogger Kodees said...

மொதக்கேள்விக்கு யாருமே பதில் சொல்லலையே?

 
At Wednesday, December 02, 2009 3:13:00 AM , Blogger Vijay said...

இரண்டாவது கேள்வி தப்பு. எப்படியும் கைதிகளின் மரணம் 10 மணித்தியாலத்திற்கு பின்புதான். அதுவரையும் பொறுத்திருக்காது உடனேயே எதில் விஷம் கலந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது.
அப்படி இருக்கும்போது எப்படி திட்டமிட்டபடி உடனேயே விருந்து வைப்பது?

 
At Saturday, December 05, 2009 1:22:00 AM , Blogger Kodees said...

ஜக்கு விடை சரியாய்ச் சொல்லிவிட்டர் விஜய்!

 
At Saturday, December 12, 2009 1:27:00 AM , Blogger Balag said...

3554799 for first question.

 
At Monday, December 14, 2009 12:38:00 AM , Blogger Kodees said...

Balag - Wrong Answer. Not that much

 
At Tuesday, December 21, 2010 1:41:00 PM , Blogger தமிழ் பையன் said...

2519 - for the second. Use LCM for 1-10 and minus 1.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home