Monday, February 09, 2009

அனுமன் யார்?

அனுமன் யார்? இதற்குப் பதில் - ராமபக்தன், வானரசேனைகளின் தளபதி, ஒரு குரங்கு என பல பதில் வரலாம். நான் வேறு ஒரு கோணத்தில் யோசித்து ஒன்று கூறுகிறேன். அதாவது அனுமன் என்பவர் அல்லது என்பது நமது மனமே. எப்படி? பாருங்கள் -

1. அனுமனது பலம் அவருக்குத்தெரியாது என்பார்கள், நமது மனோபலம் மூலம் நாம் சாதிக்கமுடியாதது எதுவுமே இல்லை ஆனால் அதன் பலம் தெரியாது நாம் இருக்கிறோம்

2. அனுமன் ஒரு குரங்கு ஒரு நிமிடம்கூட ஒரு நிலையில் இல்லாமல் அங்குமிங்கும் சுற்றும் ஒரு குரங்கின் அதே அம்சம்தான் நமது மனமும்.

3. அனுமன் வாயுபுத்திரன் - வாயுவிற்கும் அனுமனுக்கும் உள்ள அதே சம்மந்தம் நமது மனத்திற்கும் காற்றுக்கும் உண்டு - மூச்சுப்பயிற்சி மூலம் நமது மனதை கட்டுப்படுத்தலாம். மனத்திற்கும் காற்றிற்கும் உள்ள சம்மந்தம் நமக்குத் தெரிந்ததே!

இன்னும் ஏதாவது இருப்பின் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமே

Labels: ,