Tuesday, December 22, 2009

ஏழாவது அறிவு!

உங்களுக்குத் தெரிந்த ஒரு கதையை இங்கே உதாரணம் காட்ட விரும்புகிறேன்.

ஒரு கிணற்றுத்தவளை - பிறந்ததில் இருந்தே அந்த கிணற்றிலேயே வாழ்ந்து வந்தது. கடும் புயல் மழையில் ஒரு கடல் தவளை ஒரு நாள் அந்தக் கிணற்றில் வந்து சேர்ந்தது. கிணற்றுத்தவளை கேட்டது "நீ எங்கிருந்து வருகிறாய்?"
"கடலிலிருந்து"
"கடலா? அது எப்படியிருக்கும்?"
"அது ரொம்பப் பெருசு!"
"ரொம்பப் பெருசா? இந்தக் கிணற்றை விடப் பெருசா?"
"அட! இந்தக் கிணற்றையும், கடலையும் எப்படி ஒப்பிடமுடியும்? அது இதைப் போல் பல லட்சம் மடங்கு பெரிசு"
"நீ பொய் சொல்றே!, இதை விட பெரிசா வேறொன்று எப்படி இருக்க முடியும்" - கிணற்றுத்தவளை

இதே போலத்தான் நாமும், நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயத்தை - இல்லை! - இருக்க முடியாது!! என்று முடிவு கட்டி விடுகிறோம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
* இருக்கிறார் என்பவர்களை விட்டு விடுவோம் - அது அவர்கள் நம்பிக்கை
* இல்லை என்பவர்கள் - உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்பவர்களையும் விட்டுவிடுவோம் - அவர்கள் என் கட்சி
* இல்லை என்பவர்கள் - கடவுள் இல்லை என்பவர்களுக்கு மட்டும் தான் இந்த விவாதம்

அறை எண் 305-ல் கடவுள் படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு இடத்தில் சொல்லுவார் - "சுவத்துல இருக்கிற பல்லிக்கு அதன் பக்கத்தில் இருக்கிற பல்ப் ஏன் எரியுது? எப்படி எரியுதுனு தெரியுமா? அல்லது விளக்கித்தான் புரியவைக்க முடியுமா?" என்று.


நான் சொல்ல வரும் விஷயமும் அதுதான். எப்படி ஐந்தறிவுள்ள ஒன்றால் ஆறறிவு படைத்த நம் செயல்களுக்கு விளக்கம் சொல்ல முடியாதோ? அதே போல் ஏழறிவு படைத்த கடவுள் செயல்களை நம்மால் கண்டு தீர்மானிக்க முடியாதல்லவா?

வரிசையாக ஊர்ந்து செல்லும் எறும்புகளை நாம் காலால் மிதித்து அழிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவை என்ன நினக்கும் (நினைத்தால்!) - இப்படி மனிதர்கள் என்ற இனம் ஒன்று உண்டு, நம்மால் அவர்களுக்குத் தொல்லை அதனால் நம்மை அழிக்கிறார்கள் என்று நினைக்குமா? தன் அறிவு நிலையைத் தாண்டி அவைகளால் சிந்திக்க முடியாது அல்லவா? ஆறறிவு பெற்ற ஒரு விலங்கு (மனிதன்தான்) இருக்கும் என்று அவை சிந்திக்குமா?

ஒரு எருமைக்கு எப்படியோ நம் தொலைக்காட்சி பற்றித் தெரிந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம் அதை இன்னொரு எருமைக்கு புரியவைக்க முடியுமா? அது எப்படிடா லண்டன்ல நடக்கிற விளையாட்டை நம்ம ஓனரு இங்கே லைவா பார்ப்பாரு? எவ்ளோ தூரம்?னுதான வாதாடும்.

கடவுள் இருக்கலாம், நமக்கு எப்படி டெக்னாலஜியோ கடவுளுக்கும் வேறு ஒரு டெக்னாலஜி இருக்கலாம், நமக்கில்லாத ஏழாவது அறிவு பெற்றிருக்கலாம். அதை வைத்து நமக்கு விளையாட்டுக்காட்டலாம்.

ஆகவே கடவுள் இருக்கிறாரா - தெரியாது என்பதுதான் என் கட்சி. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் - தெரியாது.

இன்னும் சில விஷயங்கள் கடவுள் இருக்கலாம் என்பதற்கு சேகரித்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் அவற்றுடன்.

அன்புடன்.

Labels: , , ,

19 Comments:

At Tuesday, December 22, 2009 1:47:00 AM , Blogger வால்பையன் said...

மேலிருக்கும் தவளை கதை நியூயார்க்கில்!?(சரியா தெரியல) நடந்த ஆன்மீக கூட்டத்தில் விவேகானந்தர் சொன்னது!

அவரது குறலிலே கேட்க அருமையாக இருக்கும்!

 
At Tuesday, December 22, 2009 1:53:00 AM , Blogger Kodees said...

வால் - கதை கிடக்கட்டும், பதில் சொல்லுங்க!, உங்களையும் மனசுல வச்சுத்தான் இந்தப் பதிவே போட்டேன்.

அன்புடன்

 
At Tuesday, December 22, 2009 1:53:00 AM , Blogger வால்பையன் said...

குறல் என்பதை குரல் என வாசிக்கவும்!

 
At Tuesday, December 22, 2009 1:55:00 AM , Blogger வால்பையன் said...

//வால் - கதை கிடக்கட்டும், பதில் சொல்லுங்க!, உங்களையும் மனசுல வச்சுத்தான் இந்தப் பதிவே போட்டேன்.//

அது தெரியுமே எனக்கு!

பதிலை, பதிவா தான் போட்டு குழப்பனும்!

 
At Tuesday, December 22, 2009 2:06:00 AM , Blogger கோவி.கண்ணன் said...

//நான் சொல்ல வரும் விஷயமும் அதுதான். எப்படி ஐந்தறிவுள்ள ஒன்றால் ஆறறிவு படைத்த நம் செயல்களுக்கு விளக்கம் சொல்ல முடியாதோ? அதே போல் ஏழறிவு படைத்த கடவுள் செயல்களை நம்மால் கண்டு தீர்மானிக்க முடியாதல்லவா?//

ஏழாவது அறிவுள்ளவர்களால் தான் ஏழாவது அறிவு உண்மையா பொய்யா என்றே சொல்ல முடியும். ஆனால் ஏழாவது அறிவு இருக்கலாம் என்று நம்பும் உரிமை, அப்படி இல்லை என்று மறுப்பவர்களுக்கும் உண்டு.

உங்க லாஜிக் கடவுளுக்கும் இன்னொரு கடவுள் இருக்கலாம் என்று நம்புவோரின் நம்பிக்கையை அனுமதிக்குமா ? :)

ஐ மீன் 8, 9, 10 ஆவது அறிவு உடைய கடவுள்கள் உண்டு என்று சொன்னால் அதை ஏழாவது அறிவு கடவுள் உண்டு என்போர் மறுப்பார்கள்.

 
At Tuesday, December 22, 2009 2:20:00 AM , Blogger Kodees said...

//ஏழாவது அறிவுள்ளவர்களால் தான் ஏழாவது அறிவு உண்மையா பொய்யா என்றே சொல்ல முடியும். ஆனால் ஏழாவது அறிவு இருக்கலாம் என்று நம்பும் உரிமை, அப்படி இல்லை என்று மறுப்பவர்களுக்கும் உண்டு//

கட்டாயம் உண்டு - நான் சொன்ன அந்த எருமையப் போல

//உங்க லாஜிக் கடவுளுக்கும் இன்னொரு கடவுள் இருக்கலாம் என்று நம்புவோரின் நம்பிக்கையை அனுமதிக்குமா ? :)//

இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் - தெரியாது - நம்பிக்கையை நான் கேள்வி கேட்பதில்லை

//ஐ மீன் 8, 9, 10 ஆவது அறிவு உடைய கடவுள்கள் உண்டு என்று சொன்னால் அதை ஏழாவது அறிவு கடவுள் உண்டு என்போர் மறுப்பார்கள்.//

அவர்கள் மறுப்பார்கள் என்பதற்காக என் வாதம் தவறாகிவிடாதல்லவா?
நான் அவர்களல்ல!

வருகைக்கு நன்றி கோவி சார்!

 
At Tuesday, December 22, 2009 2:26:00 AM , Blogger வால்பையன் said...

//இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் - தெரியாது - நம்பிக்கையை நான் கேள்வி கேட்பதில்லை//

கேள்வி கேட்பதால் ஏதும் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை!

பதிலில்லாமல் கேள்விகள் மட்டும் இருக்குமா என்ன!?

 
At Tuesday, December 22, 2009 2:27:00 AM , Blogger வால்பையன் said...

//அவர்கள் மறுப்பார்கள் என்பதற்காக என் வாதம் தவறாகிவிடாதல்லவா?
நான் அவர்களல்ல!//

அந்த ஸ்டேஜில இருந்து நாங்க யோசிக்கிறோம்னு வச்சுகுவோமே!

 
At Tuesday, December 22, 2009 2:35:00 AM , Blogger Kodees said...

//கேள்வி கேட்பதால் ஏதும் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை!//

தவறில்லை. ஆனால் என் வாதம் நான் அவர்களல்ல என்பதே. விவாதம் திசை திரும்ப நான் அனுமதிக்கப் போவதில்லை.

கடவுள் இல்லை என்பவர்கள் - இருக்கிறாரா? இல்லையா என்பது தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ள வைப்பதே இந்த விவாதம். இதில் ஆத்திகர்களுக்கு வேலையே இல்லை.

 
At Tuesday, December 22, 2009 2:59:00 AM , Blogger வால்பையன் said...

//கடவுள் இல்லை என்பவர்கள் - இருக்கிறாரா? இல்லையா என்பது தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ள வைப்பதே இந்த விவாதம்.//

இந்த ”தெரியவில்லை” என்ற வார்த்தை கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தும்!

நல்ல விவாதத்தை ஆரம்பித்து என் மனநிலையை மாற்றியதற்கு நன்றி தல!

 
At Tuesday, December 22, 2009 3:05:00 AM , Blogger ஆரூரன் விசுவநாதன் said...

நீண்ட விவாதத்திற்கு நான் தயாராக இல்லை.......


உள்ளேன் ஐயா....மட்டும் சொல்லிக்கிறேன்

 
At Tuesday, December 22, 2009 4:31:00 AM , Blogger ஈரோடு கதிர் said...

என்னோட எட்டா(த)வது அறிவு என்ன கேக்குதுன்னா...

கம்னு இருந்த கோடீஸ... பதிவர் சங்மத்துக்கு இழுத்து இப்பொ தெனம் 2இடுகை போடவச்சிட்டாங்களே...

அவங்க வீட்ல சண்டைக்கு வந்தா யார் பதில் சொல்றது

 
At Tuesday, December 22, 2009 8:45:00 PM , Blogger Kodees said...

//இந்த ”தெரியவில்லை” என்ற வார்த்தை கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தும்!//

சரி - அவங்கள விடுங்க!, நீங்க ஒத்துக்கொள்கிறீர்களா?

ஆரூரன்!
//நீண்ட விவாதத்திற்கு நான் தயாராக இல்லை.......//

சும்மா நீங்க எந்த சைடுனு மட்டும் சொல்லுங்க!

கதிர்!
//கம்னு இருந்த கோடீஸ... பதிவர் சங்மத்துக்கு இழுத்து இப்பொ தெனம் 2இடுகை போடவச்சிட்டாங்களே...//

அந்தப் புண்ணியம் உங்களுக்குத்தான்!

 
At Tuesday, December 22, 2009 8:47:00 PM , Blogger Kodees said...

//நல்ல விவாதத்தை ஆரம்பித்து என் மனநிலையை மாற்றியதற்கு நன்றி தல!//

என்னதிது! நன்றி அது இதுனு.

 
At Tuesday, December 22, 2009 8:48:00 PM , Blogger வால்பையன் said...

//இந்த ”தெரியவில்லை” என்ற வார்த்தை கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தும்!//

சரி - அவங்கள விடுங்க!, நீங்க ஒத்துக்கொள்கிறீர்களா?//

ஒத்துகிறேன்,
கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் கடவுள் இருக்காரா, இல்லையான்னு தெரியாதுன்னு ஒத்துகிறேன்!

 
At Tuesday, December 22, 2009 8:49:00 PM , Blogger வால்பையன் said...

ஆரூரன்!
//நீண்ட விவாதத்திற்கு நான் தயாராக இல்லை.......//

சும்மா நீங்க எந்த சைடுனு மட்டும் சொல்லுங்க!//


உங்க சைடு தான்

 
At Tuesday, December 22, 2009 8:54:00 PM , Blogger Kodees said...

//ஒத்துகிறேன்,// - நன்றி

//கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் கடவுள் இருக்காரா, இல்லையான்னு தெரியாதுன்னு ஒத்துகிறேன்!// - அத அவங்க சொல்லட்டும், நீங்க என்ன அவங்க வக்கீலா?

 
At Tuesday, December 22, 2009 8:57:00 PM , Blogger வால்பையன் said...

நீங்க தான ஒத்துக்க சொன்னிங்க!

 
At Tuesday, December 22, 2009 9:03:00 PM , Blogger Kodees said...

//நீங்க தான ஒத்துக்க சொன்னிங்க!//
சரீரீரீரீரீரீ

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home