Tuesday, January 30, 2007

1 லட்சம் பரிசு

"கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரும் விவசாயிகளின் கோரிக்கை தவறு என நிரூபிப்பவருக்கு ரூ 1 லட்சம் பரிசு"

எங்கள் ஊரின் தெருச்சுவர்களில் கண்ட விளம்பரம் இது. இதைக் கண்டவுடன், ஆகா தமிழ்மணத்தில் நம்மாட்கள் எதை வேண்டுமானாலும் தவறு (அல்லது சரி) என்று வாதிடுவார்களே, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்று இந்த அறிவிப்பு.