Tuesday, July 28, 2009

புதிதாய் புதிர்கள்

1. பத்து திருடங்க மாங்கா திருடப்போய் நிறைய மாங்காய் திருடிட்டாங்க. திரும்ப வரும்போது இருட்டாய்டுச்சு, ஒரு சத்திரத்துல திருடின மாங்காய்கள கொட்டி வச்சுட்டு, காலைல பிரிச்சுக்கலாமுனு தூங்கிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல ஒரு திருடன் எழுந்து ரொம்ப பசிக்குது, நாமே சரியா பிரிச்சு வச்சுட்டு நம்ம பங்கு மாங்காய சாப்பிடலாம்னு பிரிக்க ஆரம்பித்தான். ஆனா சரியா பிரிக்க ஒரு காய் குறைந்தது. என்ன செய்யலாம்னு பார்த்தான் அப்போ சுவரில் இருந்த ஒரு சந்துக்குள் ஒரு மாங்காய் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்து அதை எடுத்தான். ஆனால் உள்ளே இருந்து ஒரு நாகம் அவன் கையில் கொத்தியது. கையை உதற மாங்காய் மீண்டும் அதே சந்தில் விழுந்தது (அப்படித்தான்!). இவன் செத்துவிட்டான்.

சற்று நேரம் கழித்து இன்னொரு திருடனுக்குப் பசிக்க அவன் எழுந்து பார்த்தான். ஒருவன் செத்துக் கிடப்பதைப் பார்த்து மகிழ்ந்து சரி இனிமேல் ஒன்பது பங்காக்கினால் போதும் என்று பிரிக்க ஆரம்பித்தான். ஆனா சரியா பிரிக்க ஒரு காய் குறைந்தது. என்ன செய்யலாம்னு பார்த்தான் அப்போ சுவரில் இருந்த ஒரு சந்துக்குள் ஒரு மாங்காய் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்து அதை எடுத்தான். ஆனால் உள்ளே இருந்து ஒரு நாகம் அவன் கையில் கொத்தியது. கையை உதற மாங்காய் மீண்டும் அதே சந்தில் விழுந்தது.

இதே போல் விடிய விடிய ஒன்பதுபேரும் செத்துப்போய்விட கடைசித் திருடன் எழுந்து அத்தனை (எத்தனை என்பதுதான் கேள்வி) காய்களையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான். அவர்கள் பறித்த காய் எத்தனை (குறைந்தபட்சம்)?

2. ஒரு ராஜா தனது நன்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். காலையில் விருந்து. இன்னும் 12 மணி நேரம் இருக்கிற போதுதான் தெரிகிறது - தன் நண்பர்களுக்காக வாங்கி வைத்திருக்கும் வெளிநாட்டு மதுபுட்டிகள் 8 -ல் ஒன்றில் விஷம் கலக்கப்பட்டிருப்பது.

அந்த விஷம் வேலை செய்ய சுமார் 10 மணி நேரம் ஆகும் (ஒருதுளி மது போதும் சாகடிப்பதற்கு). எப்படி எந்தப் புட்டியில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது, விருந்தைத் தள்ளி வைப்பதும் கேவலம் என்று யோசிக்கும் போது அவருக்கு நினைவுக்கு வந்தது - மூன்று மரணதண்டனைக் கைதிகள்.

இவர்களை வைத்து இந்த மதுபுட்டிகளை சோதித்து அதை தூக்கி எறிந்து விடுங்கள் இவர்களில் யார் செத்தாலும் பரவாயில்லை, விருந்தினர்களுக்கு ஏது ஆகக்கூடாது என்று தன் மந்திரியைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். மந்திரியும் தன் மூளையைக் கலக்கி சரியாகக் கண்டுபிடித்துவிட்டார்.

நீங்களும் தான் கண்டுபிடியுங்களேன்.

Labels:

Tuesday, July 07, 2009

ஷேர் மார்கெட்டும் - ஸ்டாடிஸ்டிக்ஸும்

வரவர ஷேர் மார்கெட் ஜோசியம் நிறையப்பேர் சொல்ல வந்திருக்காங்க!. அதும் Chart, Support, Resistance என பல டெக்னிக்கல் வார்த்தைகளுடன் அசத்த ஆரம்பிச்சிருக்காங்க. நல்லது.

என் கேள்வி என்னான்னா

1. Statistics -நிஜ வாழ்வில் எப்படி ஒத்துவரும்?

2. இன்று technicals எதுவும் வேலை செய்யவில்லை என்று சொல்வது ஏன்?

3. ஒரு நம்பர் லாட்டரி இருந்தபோது, இன்று எந்த நம்பர் வாங்கலாம் என்பதை ஏதோ ராக்கெட் சைன்ஸ் போல கணக்கிட்டு பணத்தைத் தொலைத்தவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

4. எந்தவிதமான் புறக்காரணிகளும் இல்லாதபோதே technicals வேலை செய்யாதது ஏன்? (மார்க்கெட் இவர்கள் Support, Resistance - ல் நிற்காதது ஏன்?)

5. பங்குச்சந்தை வாங்குவர்களாலும், விற்பவர்களாலும்தான் நகர்கிறதா? இல்லை Statistics படி நகர்கிறதா?

இன்னும் வரும்!