Thursday, October 18, 2007

புதிர்கள் - எண் - 8

1.
உங்களிடம் இரண்டு கயிறுகள் (இரண்டும் சம நீளம் கொண்டவை அல்ல) உள்ளன. ஆனால் ஒரு முனையில் பற்றவைத்தால் ஒரு மணிநேரம் எரியக்கூடியவை. இந்த கயிறுகளை வைத்து எப்படி 45 நிமிடத்தை கணக்கிடுவீர்கள்

2.
8 லிட்டர், 5 லிட்டர், 3 லிட்டர் கேன்கள் உள்ளன. 8 லிட்டர் கேனில் முழுதுமாக பால் உள்ளது 5,3 லிட்டர் கேன்கள் காலி. இந்த 3 கேன்களை வைத்து 8 லிட்டர் கேனில் 4 லிட்டரும், 5 லிட்டர் கேனில் 4 லிட்டரும் எப்படி பிரிப்பீர்கள்

Tuesday, October 16, 2007

புதிர் எண்-7

நீங்கள் ஒரு காரில் ஒரே வேகத்தில் செல்கிறீர்கள். ஒரு இடத்தில் உள்ள மைல் கல்லில் ஒரு இரண்டெழுத்து எண் (Two digit number) அதில் உள்ளது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து மற்றொறு மைல்கல் பார்க்கிறீர்கள் அதில் ஒருமணிக்கு முன்னால் பார்த்த கல்லில் இருந்த எண்கள் மாறி (34 -43, 56-65 போல்) உள்ளது. மீண்டும் ஒரு மணிநேரப்பயணம் இப்பொழுது உள்ள கல்லில் முதல் கல்லில் உள்ள எண்கள் நடுவில் இப்போது பூஜ்யம் சேர்ந்து உள்ளது.

அப்படியானால் நீங்கள் சென்ற காரின் வேகம் என்ன? விளக்கம் தந்தால் நல்லது.

புதிர் எண்-6

ஒரு செல்வந்தர் தன் சொத்துக்களை ஒரு உயில் எழுதிவைத்துவிட்டு செத்துப் போய்விட்டார். அந்த உயிலில் "எனது மகன்கள் இருவரும் தத்தம் காரில் வீட்டிலிருந்து புறப்பட்டு மகாபலிபுரம் செல்ல வேண்டும், ஆனால் எந்த காரின் சொந்தக்காரன் கடைசியாக மகாபலிபுரத்தை அடைகிறானோ அவனுக்கே என் முழு சொத்தும்" என்று இருந்தது.

உடனே இருவரும் தத்தம் காரில் மனம் போன போக்கில் சுற்றித்திரிந்தார்களே தவிர மகாபலிபுரத்தை அடைய முயற்சிக்கவில்லை. நாட்கள் கடந்தன, இருவருக்கும் வாழ்க்கை வெறுத்துப்போய் உங்களிடம் வந்து யோசனை கேட்கிறார்கள்.

நீங்கள் என்ன யோசனை சொல்லி இந்தப் பிரச்னையைத்தீர்ப்பீர்கள்