Friday, August 31, 2007

தமிழக (தமிழ்மண!) புஷ்கள்

"Every nation has to either be with us, or against us" -President George W. Bush

எங்ககூட இல்லைனா யாரா இருந்தாலும் எங்க எதிரிதான். நடுநிலையாவது மண்ணாவது. யார்னு பார்க்கமாட்டோம் சகட்டுமேனிக்கு வார்த்தை இறைப்போம். ஆண்-பெண் பேதமெல்லாம் கிடையாது. அவனை அடங்கச்சொல் - நான் அடங்குறேன், நீ என்ன அவனுக்கு (அவர்களுக்கு?) சப்போர்ட்டா?

இதே கதைதான் இப்ப தமிழ்மணத்தில நடக்குது.

Wednesday, August 29, 2007

ஹய்யோ! ஹய்யோ!!

மக்களே இப்ப தமிழ்மணத்திலேயும், தேன்கூட்டிலேயும் நடக்கிற அசிங்கமான கூத்துகளைப் பார்க்கும்போது எனக்குத் தோனறதெல்லாம் - "படிப்பு மட்டுமே ஒருத்தருக்கு நாகரீகத்தைக் கொடுக்காது" என்பதுதான். எங்க கிராமத்தில படிக்காதவங்க கூட (அட ஒரு போக்கிரி கூட!) சொல்லக்கூசும் வார்த்தைகளை இவிங்க சர்வசாதரணமா சொல்லறாங்க. இவிங்க ஒரு கோஷ்டியா (ஒரு முடிவோடு!!) ஒரு ஆளைத்தாக்க, அந்தப் பக்கம் அதைவிட மோசமான எதிர்வினை.

எங்க ஊர்ல சொல்லுவாங்கா "ரெண்டு நல்லவங்க எதிர்க்க எதிர்க்க வந்தா மூனு பாதை, ஒரு நல்லவன் ஒரு மோசமானவன் எதிர்க்க எதிர்க்க வந்தா ரெண்டு பாதை, ரெண்டு மோசமானவங்க எதிர்க்க எதிர்க்க வந்தா ஒரே பாதைதான்" அப்படினு.

மேலே சொன்ன பழமொழிய வச்சுப் பார்த்தால் இங்க ஒரே பாதையில் ரெண்டு கோஷ்டி அல்லாடுற மாதிரி தெரியுது.

பெரியார் ஒருமுறை சொன்னதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். (எனது நியாபகத்திலிருந்து) பெரியாரைப் பற்றி ஒருவர் தவறாகப் பிரசாரம் செய்துகொண்டிருந்தாராம், பெரியார் தொண்டர்கள் அது பற்றி பெரியாரிடம் சொல்லி, நீங்கள் அதற்கு மறுப்பு சொல்லவேண்டும் என்று கேட்டனராம். அதற்கு பெரியார் "எனக்கு பிட்டத்தில் சிரங்கு என்று எவனாவது சொன்னால் நான் அப்படி இல்லை என்று ஒவ்வொருத்தரிடமும் சென்று தூக்கிக் காட்டிக்கொண்டிருக்கமுடியாது - கண்டுக்காம நாம நம்ம வேலையைப் பார்ப்போம்" என்று சொன்னாராம்.

எதிர்ப்பு வேண்டியத்துதான், ஆனால் இப்படியா? "ஒரு முட்டாளுடன் விவாதம் செய்யாதே, அப்புறம் யார் முட்டாள் என்று தெரியாமல் போய்விடும்" என்பது இந்தப் படித்த மேதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டது.

ம்! ஹய்யோ! ஹய்யோ!!

Labels: ,