Saturday, December 09, 2006

பெரியார் சிலையும் சில கேள்விகளும்

ஸ்ரீரங்கத்தில் வைக்கப்பட உள்ள பெரியார் சிலையைப் பற்றி எனது கேள்விகள் சில

முதலில் எதிர்ப்பாளர்களுக்கு!

1. கடவுள் முன் ஒரு நாத்திகன் சிலையா என்றால் எத்தனை எத்தனை அரசு அலுவலகங்களில் பிள்ளையார் சிலை உள்ளதே, அவை எல்லாம் நாத்திகர்களுக்கு வருத்தம் தராதா?

2. கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், அருவருக்கத்தக்க நபர்கள் இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா?

3. சிலையை உடைப்பது என்பது நீங்கள் எப்படிச் செய்யலாம், ஒரு கல் உங்களுக்குக் கடவுள் என்றால், மற்றொறு கல் அவர்களுக்கு கடவுள் அல்லவா?

4. ராமர் கோவில் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வைக்கமாட்டோம் என்று சொல்வதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டள்ளவா?


ஆதரவாளர்களுக்கு!!

1. சிலையை அந்த இடத்தில் வைப்பதன் மூலம் நீங்கள் என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள், ஆத்திகர்களை நோகடிப்பதைத் தவிர?

2. ஒரு சிலைக்கு சந்தனம் பூசியவுடன் கொதித்து எழுந்த நீங்கள், அதே உணர்வு அவர்களுக்கும் இருக்ககூடாது என்கிறீர்களா?

3. இது ஜனநாயக நாடு, பெரும்பான்மைதான் அனைத்தையும் முடிவு செய்யும் எனும்போது , பெரும்பான்மை ஆத்திகர்களின் விருப்பத்திற்கு ஏன் இனங்கக்கூடாது?

4. ராமர் அந்த இடத்தில்தான் பிறந்தாரா? வேறு இடத்தில் சிலை வைக்ககூடாதா எனக் கேட்கும் கேள்வி, இங்கே அதை விட வலுவாக இல்லையா?