Tuesday, October 17, 2006

பின்னூட்டப் புறக்கணிப்பு

தனக்கு ஜால்ரா போடாத பின்னூட்டங்களை புறக்கணிப்பது சிலருக்கு வாடிக்கையாக உள்ளதா?

1. Hariharan
2. Living Smile
ஆகிய இருவருக்கும் நான் இட்ட பின்னூட்டங்கள் (கேள்விகள்) மறுதலிக்கப்பட்டுள்ளது. உண்மையை (அது பிரசுரிக்க தகாதது இல்லையெனில்) எதிர்கொள்ள தயங்கும் போக்கு, மாற்றான் கருத்துக்கு மதிப்பளிக்க மறுக்கும் பாங்கு பொதுவாகவே நம் (வலையில்) பழக்கமாக மாறிவருகிறதா?

Thursday, October 05, 2006

புதிர் எண் - 5

1. ஆரோக்கியமான இரண்டு நபர்கள் ஒரு பாரில் நுழைந்து ஒரே பானத்தை பகிர்ந்து குடிக்கிறார்கள், அந்த இருவரில் ஒருவர் செத்துவிடுகிறார்? போஸ்ட்மார்ட்டம் விஷத்தால் மரனம் என்கிறது. எப்படி?

2. நான் ஒரு கடைக்குச் சென்றேன். அங்கு ஒரு பொருளின் விலை கேட்டேன் அதற்கு விற்பனையாளர் - 3 வாங்கினால் 3ரூபாய், 10 வாங்கினால் 6ரூபாய், 200 வாங்கினால் 9ரூபாய் என்கிறார். நான் என்ன வாங்கப் போனேன்?


 

Tuesday, October 03, 2006

டோண்டுவும் - பின்னூட்டமும்

நான் திரு.டோண்டுவின் பதிவில் பின்னூட்டமிட்டேன், அதன் வினை எனக்கு ஆபாச பின்னூட்டங்கள், வலை நண்பர்களே, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

ராஜ்வனஜ் - க்கு சில கேள்விகள்


"இந்தியா என் சகோதரன் கையில் கொடுத்திருப்பது - மலம்"

என்ற தலைப்பில் திரு. rajavanaj அவர்கள் பதிவைப் பார்த்தேன். அட! அட!!, அங்கே அவர் மேற்படி தலைப்பில் பாட, ஒரு கோஷ்டியே அதற்கு தாளம் போட - ஒரே அமர்க்களம் போங்கள். நான் இட்ட பின்னூட்டத்திற்கு பதிலாக - எனக்குத் தெளிவு இல்லை என்ற பதில். ஐயா!, எனக்கு சில கேள்விகள், தயவு செய்து என்னைத் தெளிவு படுத்துங்கள்.

1. என் சகோதரன் -இந்த சகோதர பாசம் பற்றி எனக்கு ஒரு குழப்பம், ஏழைகள் மட்டும்தான் உங்கள் சகோதரன் ஆக முடியுமா? அதிலும் படிக்காத ஏழைகள் மட்டும்தான் உங்கள் சகோதரன் ஆக முடியுமா? அதிலும் ஓட்டுள்ள படிக்காத ஏழைகள் மட்டும்தான் உங்கள் சகோதரன் ஆக முடியுமா? சுதந்திரம் வாங்கி இத்தனை நாள் ஆகியும் உங்கள் சகோதரன் வேறு வேலையே தெரியாமல் உங்கள் வாயைப் பார்த்துக்கொண்டே மலம் அள்ளிக் கொண்டே இருக்கிறானா? "ஆட்கள் தேவை" போர்டுகள் தொங்கிக் கொண்டே இருக்கும் ஊர்கள் பல உள்ளதே உங்கள் சகோதரன் அதைக் கவனிக்கவில்லையா? ஓ!, படிக்கவில்லை அல்லவா!, உம் போன்ற சகோதரர்கள் படித்துச் சொல்லலாமே? அப்படியென்ன வேலை இல்லாதவர்களின் கடைசிப் புகலிடமா மலம் அள்ளுவது? எத்தனை பேர் வேறு வேலை செய்யவில்லை? இல்லை மலம் அள்ளச் சொல்லி இப்போது யாராவது கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? இந்தியர்கள் மட்டும்தான் உங்கள் சகோதரனா? இல்லை மனிதர்கள் அனைவரும் உங்கள் சகோதரனா? மனிதர்கள் மட்டும்தான் உங்கள் சகோதரனா? இல்லை உயிரினங்கள் அனைத்தும் உங்கள் சகோதரனா?


2. மலம் அள்ளுவது என்ன கேவலமா? நம் ஒவ்வொருவர் உடம்பிலும் சிறிதளவு மலம் உள்ளதுதானே. மலத்தைத் தொடாதவர்கள் நம்மில் யாராவது உண்டா? எந்த தொழிலும் சிறந்ததுதானே?. (உடனே ஏன் நீ அதைச் செய்யக் கூடாது என பதில் கேள்வி வேண்டாம், நான் அல்ல இந்த உலகில் யாவரும் when inevitable எதையும் - எதையும் செய்பவர்களே) மலம் கேவலமா? அதை உற்பத்தி செய்யும் பயனற்ற மனிதன் கேவலமா?

3. "இந்தியா என் சகோதரன் கையில் கொடுத்திருப்பது - மலம்" - இந்தியா எப்போது கொடுத்தது? ஓ!! இந்திய அரசாங்கமோ? சரி, ஒரு அரசாங்கம் உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் என்னதான் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள். அடுக்கு மாடி குடியிருப்பும், தினம் ஐநூறு பணமுமா? ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பை வாடைகைக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தில் சாராயம் போடும் உங்கள் சகோதரர்களுக்கு அரசாங்கம் என்னதான் செய்ய வேண்டும். கல்வியில், வேலையில் என இட ஒதுக்கீடு அளித்தும் மலம்தான் அள்ளுவேன் எனும் உங்கள் சகோதரர்களுக்கு வேறு என்னதான் வேண்டும்?

4. இது Survival of the FITTEST!- உலகம். போராடுங்கள், வெல்லுங்கள். குறை சொல்லிப் புலம்பாதீர்கள். Nothing is GRANTED!. உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லுங்கள், சொல்லுவீர்களா?

அன்புடன்