Tuesday, September 26, 2006

புதிர் எண் - 4


ஒரு கணிதப்புதிர்.



எப்படி?



கணிதம் தெரியாதவர்களுக்காக மற்றொரு புதிர்.

என்னிடம் 9 ஒரே மாதிரியான இரும்புக்குண்டுகள் உள்ளன. அதில் 8 குண்டுகள் ஒரே எடை. ஒன்று மட்டும் சற்று எடை அதிகம். என்னிடம் ஒரு தராசு (balance) உள்ளது. இரண்டு முறை மட்டும் குண்டுகளை அதி்ல் போட்டு எடை பார்க்கலாம். எடை அதிகமான குண்டு எது என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்.

Saturday, September 23, 2006

புதிர் எண் - 3

படியூர் நோக்கி நீங்கள் செல்கிறீர்கள். ஓரிடத்தில் 2 பாதைகள் பிரிகிறது. அதில் ஏதோ ஒன்றுதான் படியூர் செல்லும். உங்களுக்கு எந்த வழி படியூர் செல்லும் வழி என்று தெரியாது வழிகாட்டி பலகைகளும் கிடையாது அந்த பிரியும் இடத்தில் 2 நபர்கள் அமர்ந்து உள்ளார்கள். அவர்களை விசாரித்துத்தான் நீங்கள் படியூர் செல்ல முடியும். அவர்களில் ஒருவர் உண்மை மட்டுமே பேசுபவர், மற்றவர் பொய் மட்டுமே பேசுபவர்.( யார் உண்மை பேசுபவர்,யார் பொய் பேசுபவர் என்று தெரியாது) நீங்கள் அவர்கள் இருவரிடமும் ஒரே ஒரு (1 மட்டுமே தலா 1 அல்ல) கேள்விதான் கேட்கவேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை வைத்து நீங்கள் சரியான வழி கண்டுபிடித்து செல்ல வேண்டும். என்ன கேள்வி கேட்பீர்கள்

Friday, September 22, 2006

அடுத்த புதிர்

என்னிடம் 10 சாக்குப்பைகளில் தலா 10 இரும்புக்குண்டுகள் உள்ளன. ஒவ்வொரு குண்டும் 1 கிலோ எடை கொண்டது. அதில் ஒரு சாக்குப்பையில் மட்டும் ஒவ்வொரு குண்டும் 1.1 கிலோ எடை கொண்டது (மற்ற 9 பையிலும் 1 கிலோ குண்டுகள் தான்).

உங்களிடம் ஒரு ஸ்கேல் உள்ளது. ஒரு காலி சாக்குப்பையும் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு பையிலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் குண்டுகளை எடுத்து காலி பையில் போட்டுக்கொள்ளலாம், ஆனால் ஒரே ஒரு முறைதன் எடை போடவேண்டும். அப்படி போட்ட எடையை வைத்து எந்த பையில் அந்த எடை அதிகமான (1.1 கிலோ) குண்டுகள் உள்ளன என்று கண்டு பிடிக்கவேண்டும்.

Thursday, September 21, 2006

பெரியார் வாழ்க! அவர் புகழ் ஓங்குக!!

விடாது கருப்பு அண்ணாத்தே வலையை பார்த்தேன், அதில் அவர்
பெரியார் வாழ்க! அவர் புகழ் ஓங்குக!!
என்று எழுதி வைத்திருந்தார், புகழ் ஓங்குக!! - சரி, அதென்ன பெரியார் வாழ்க!, செத்தவர் எப்படி வாழ முடியும். சரி, சரி இதெல்லாம் ஒரு மரபா போச்சுது.

ஒரு புதிர்

என்னிடம் 3 சிகப்பு பந்துகளும், 3 நீல பந்துகளும் உள்ளன. ஒரு பெட்டியில் 2 சிகப்பு பந்துகளும், ஒரு பெட்டியில் 2 நீல பந்துகளும்,ஒரு பெட்டியில் 1 சிகப்பு 1 நீல பந்துகளும் என அடைத்து சீல் செய்துவிட்டேன். எனது பிரிண்டரில் சிகப்பு, நீலம், இரண்டும் என 3 பேப்பர் பிரிண்ட் செய்து அந்த பெட்டியில் ஒட்டும் போது அனைத்தையும் தவறாக ஒட்டிவிட்டேன் (அதாவது சிகப்பு என்ற பேப்பர் ஒட்டப்பட்ட பெட்டியில் நிச்சயமாக சிகப்பு இல்லை, நீலம் என்ற பேப்பர் ஒட்டப்பட்ட பெட்டியில் நிச்சயமாக நீலம் இல்லை)

இப்போது கேள்வி

நீங்கள் ஏதாவது ஒரு பெட்டியை திறந்து கண்களை மூடியவாறு அதில் உள்ள 2 பந்தில் எதாவது ஒரு பந்தை மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடிவிட வேண்டும். கையில் உள்ள பந்தின் நிறத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன நிற பந்துகள் உள்ளன என்று கண்டுபிடிக்கவேண்டும்

முயற்சியுங்கள்

அன்புடன்

Tuesday, September 05, 2006

மறு மொழி மட்டுருத்தல்

ஏன் எனது பதிவின் "மறுமொழி திரட்டப்படுவதில்லை"
மறுமொழி திரட்டப்பட நான் என்ன செய்ய வேண்டும்?